Primary tabs


பொருட்பெற்றி கூறுவார்
பல திறத்தராவர்; அவர் எல்லார்க்கும்
அவற்றது நிலையாமை உடம்பாடாகலின், ஈண்டு அதனையே
கூறுகின்றார். இஃது உணர்ந்துழி அல்லது பொருள்களின் பற்று விடாது
ஆகலின், இது முன் வைக்கப்பட்டது. நில்லாத வற்றை
நிலையின
என்றுணரும் புல்லறி வாண்மை கடை. நிலையுதல் இலவாகிய
பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய
அறிவினை உடையராதல்; துறந்தார்க்கு இழிபு. தோற்றம்
உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால்
அவற்றின்மேல்
பற்றுச் செய்தல் பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது
வீடுஎய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி
புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றிச் செய்து
சிற்றின்பத்துக்கு
ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும்
யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான்
அவற்றது
நிலையாமையை விதந்து கூறுப. கூத்தாட் டவைக்குழாத் தற்றே
பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. ஒருவன் மாட்டுப் பெரிய
செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர்
குழாம் வந்தாற்போலும், அதனது போக்கும் அக்கூத்தாட்டு
முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். பெருஞ்செல்வம் எனவே,
துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச
உம்மையான்,
வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண்
பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும்
போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக
அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம்
போயவழித்
தானும் போம் என்றதாயிற்று. அற்கா

