Primary tabs


என்பது பெயரன்றி இடைச்
சொல்லாகலானும், ''ஒன்றுபோல் காட்டி''
என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், ''அது''
என்பது
குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை அறிக. நாச்செற்று
விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்
படும்.
உரையாடா வண்ணம் நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே;
வீட்டிற்கு ஏதுவாகிய அறம் விரைந்து செய்யப்படும். மேல் நோக்கி
வருதல் ஒரு தலையாகலானும், வந்துழிச் செய்தலே
அன்றிச்
சொல்லும் ஆகாமையானும் ''வாராமுன்'' என்றும், அதுதான்
இன்னபொழுது வரும் என்பது இன்மையின்
''மேற்சென்று'' என்றும்
கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும் ஆற்றின்மேல்
வைத்து நிலையாமை கூறியவாறு. நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை
என்னும் பெருமை உடைத்திவ் வுலகு. ஒருவன் நெருநல்
உளனாயினான், அவனே
இன்று இல்லையாயினான் என்று சொல்லும்
நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகம். ''ஈண்டு
உண்மை
பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை
பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார்.
இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம். ஒருபொழுதும்
வாழ்வ தறியார் கருதுப கோடியும் அல்ல பல. ஒரு பொழுதளவும் தம்
உடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார், மாட்டாது
வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய
நினைவுகளை
நினையா நிற்பர் அறிவிலாதார். இழிவு சிறப்பு உம்மையால் பொழுது
என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின்
அளவே
வாழ்தற்கும்
அளவாகலின்,
அஃது
அறியப்படாதாயிற்று.
பலவாய நினைவுகளாவன: பொறிகளான்
நுகரப்படும்
இன்பங்கள் தமக்கு உரியவா

