Primary tabs


வனுக்கு, தான் ஒரு
பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுபிறப்பினும்
சென்று உதவுதலை உடைத்து. வினைகள்போல உயிரின்கண் கிடந்து
அது புக்குழிப் புகும் ஆகலின், ''எழுமையும் ஏமாப்பு உடைத்து''
என்றார். மேலே கூறப்பட்டதுகுறள் 62. உதவுதல் - நன்னெறிக்கண்
உய்த்தல். தாம்இன் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்
தார். தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால்
அச்சிறப்பு நோக்கி, கற்றறிந்தார் பின்னும் அதனையே
விரும்புவர்.
தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை
நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண்
அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல்.
உலகு இன்புறுதலாவது: ''இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன
எல்லாம் அறியப்பெற்றோம்''் என்றும் ''யாண்டு பலவாக நரையில
மாயினேம்'' புறநா. 191 என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல்
காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகை
யாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின்
''கற்றறிந்தார்''் என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத்தாம்
இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின்
அதனையே காமுறுவர் என்றும் கூறினார். கேடில் விழுச்செல்வம்
கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை. ஒருவனுக்கு
இழிவு இல்லாத
சீரிய செல்வமாவது கல்வி,
அஃது ஒழிந்த மணியும் பொன்னும்
முதலாயின
செல்வமல்ல. அழிவின்மையாவது: தாயத்தார்,
கள்வர்,
வலியர், அரசர் என்ற இவரால்
கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக்
கொடுத்துழிக்
குறையாமையும் ஆம். சீர்மை: தக்கார்கண்ணே
நிற்றல்.
மணி, பொன்
முதலிய

