Primary tabs


கொள்ளுதல் ஒழிதல் செய்வது
அறிவு என்பதாம். எண்பொருள
வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.
தான் சொல்லும் சொற்களை அரிய பொருள் ஆயினும் கேட்பார்க்கு
எளிய பொருள் ஆமாறு மனம்கொளச் சொல்லி,
பிறர்வாய்க் கேட்கும்
சொற்களின் நுண்ணிய பொருள்காண அரிதாயினும் அதனைக் காண
வல்லது அறிவு. உடையவன் தொழில் அறிவின்மேல் ஏற்றப்பட்டது.
சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார்
சொல்மேல் வைத்தும், கேட்பன வழுவினும் இனிது விளங்கா
ஆயினும் பயனைக் கொண்டொழிக என்பார் பொருள்மேல் வைத்தும்
கூறினார். உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும்
இல்லது
அறிவு. உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு
ஒட்பமாம்,
அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும்
இன்றி ஒரு
நிலையனாவது அறிவாம்.
''தழீஇயது'', ''இல்லது'' என்பன அவ்வத்
தொழில்மேல்
நின்றன. உலகம் என்பது ஈண்டு
உயர்ந்தோரை.
அவரோடு கயப்பூப்போல
வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு
நிலையே
நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை
அறிவு
என்றார்.
காரியங்கள்
காரணங்களாக
உபசரிக்கப்பட்டன.
இதனைச் செல்வத்தில்
மலர்தலும் நல்குரவில்
கூம்பலும்இல்லது
என்று உரைப்பாரும் உளர். எவ்வ துறைவ துலகம்
உலகத்தோ
டவ்வ துறைவ தறிவு. உலகம்
யாதொருவாற்றான்
ஒழுகுவதாயிற்று, அவ்வுலகத்தோடு
மேவித் தானும் அவ்வாற்றான்
ஒழுகுவது
அரசனுக்கு அறிவு.
''உலகத்தையெல்லாம் யான்
நியமித்தலான்
என்னை நியமிப்பாரில்லை,'' எனக் கருதித் தான்
நி

