தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   166


வர்,   கள்வர்,   கற்றறிந்தார்,   வினை  செய்வார்   என்றிவர்களான்
வருவன.  அவை  சாம  பேத  தான  தண்டங்கள் ஆகிய நால்வகை
உபாயத்துள்  ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான்
வருவனவற்றை  உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால்  காத்தலும்,
மக்களான்  வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல்
என்பனவற்றுள்   அறிந்து,  அவ்வுபாயங்களுள்  ஒன்றால்  காத்தலும்
ஆம்;  ஆகவே   புரோகிதரையும்  அமைச்சரையும் கூறியவாறாயிற்று.
இங்கிதம்  -  குறிப்பால்  நிகழும்  உறுப்பின்  தொழில்.  ஆகாரம் -
குறிப்பின்றி   நிகழும்   வேறுபாடு.   உவப்பன  -  நன்கு  மதித்தல்
முதலியன.     இவை     இரண்டு     பாட்டானும்     பெரியாரது
இலக்கணமும்,அவரைத்     துணையாகக்     கோடல்    வேண்டும்
என்பதூஉம்,கொள்ளுமாறும்   கூறப்பட்டன.  அரியவற்றுள்  எல்லாம்
அரிதே  பெரியாரைப்  பேணித் தமராக் கொளல். அப்பெரியவர்களை
அவர்  உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்,
அரசர்க்கு  அரிய  பேறுகள்  எல்லாவற்றுள்ளும்  பெரிது.  உலகத்து
அரியனவெல்லாம்  பெறுதற்கு  உரிய  அரசர்க்கு  இப்பேறு சிறந்தது
என்றது.  இதனான்  அவையெல்லாம்  உளவாதல்  நோக்கி.  தம்மின்
பெரியார்   தமரா  ஒழுகுதல்  வன்மையுள்  எல்லாம்  தலை. அறிவு
முதலியவற்றால்  தம்மின்  மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர்
வழிநின்று ஒழுகுதல், அரசர்க்கு.  எல்லா வலி உடைமையினும் தலை.
பொருள்,   படை,  அரண்களான்  ஆய  வலியினும்  இத்துணைவலி
சிறந்தது  என்றது.  இவர்  அவற்றான்  நீக்கப்படாத தெய்வத்துன்பம்
முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின். சூழ்வார்கண் ணாக ஒழு
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)