Primary tabs


து யாவர்? தீயன:
பாவங்களும் நீதியல்லனவும் துணையாம்
தன்மையாவது,
தமக்கு அவையின்மையும்,
அரசன்கண்
அன்புடைமையும் ஆம்.
அத்தன்மை உடையார் நெறியின் நீங்க
விடாமையின்,
அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார்
என்பதாம். ''நெருங்கிச்
சொல்லும் அளவினோரை'' என்று
உரைப்பாரும்
உளர். இவை இரண்டு பாட்டானும்
அதன் பயன்
கூறப்பட்டது. இடிப்பாரை
இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார்
இலானுங்
கெடும். சுழறுதற்கு உரியாரைத் தனக்குத்
துணையாகக்
கொள்ளாமையின் காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பார்
இல்லையாயினும் தானே கெடும். ''இல்லாத, ஏமரா'' என்பன
பெயரெச்ச அடுக்கு. கொடுப்பார் உளராவர் என்பது தோன்ற,
''இலானும்'' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத
யானைபோல
நெறியல்லா நெறிச் சென்று கெடுதல். முதல்இலார்க்கு ஊதியம் இல்லை
மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை. முதற்பொருள் இல்லாத
வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், அதுபோலத்
தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான்
வரும்
நிலையில்லை. முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத்
தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச
பாரத்தோடு சலியாது நிற்றல். பல்லார் பகைகொளலின்
பத்தடுத்த
தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். தான் தனியனாய் வைத்துப்
பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து;
அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.
பலர் பகை
ஆயக்கால் ''மோதி முள்ளொடு முட்பகை
கண்டிடல், பேது செய்து
பிளந்திடல்'' சீவக. விமலை. 32
என்பவையல்லது,

