தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   170


தனி   நிலைக்கண்   தன்   தன்மைத்தாய  அறிவு,   பிறஇனத்தோடு
சேர்ந்தவழிக்  காட்சி  முதலிய  தொழில்கள்  திரியும் என,  இதனான்
அதனது  காரணங்  கூறப்பட்டது.  மனத்தானாம்  மாந்தர்க் குணர்ச்சி
இனத்தானாம்  இன்னான்  எனப்படும்  சொல்.  மாந்தர்க்குப்  பொது
உணர்வு  தம்  மனம் காரணமாக உண்டாம் ''இவன்  இத்தன்மையன்''்
என்று   உலகத்தாரான்   சொல்லப்படும்  சொல்  இனம் காரணமாக
உண்டாம்.   இயற்கையாய   புலன்  உணர்வு  மாத்திரத்திற்கு இனம்
வேண்டாமையின்,  அதனை மனத்தான் ஆம் என்றும், செயற்கையாய
விசேட  உணர்வுபற்றி  நல்லன்  என்றாகத்  தீயன்  என்றாக நிகழும்
சொற்கு  இனம் வேண்டுதலின், அதனை ''இனத்தான் ஆம்''  என்றும்
கூறினார். உவமையளவை கொள்ளாது ''அத் திரிபும்'' மனத்தான் ஆம்
என்பாரை  நோக்கி,  இதனான்  அது மறுத்துக் கூறப்பட்டது. மனத்து
ளதுபோலக்  காட்டி  ஒருவற்  கினத்துள தாகும் அறிவு. அவ் விசேட
உணர்வு, ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப்
புலப்படுத்தி,    அவன்   சேர்ந்த    இனத்தின்கண்ணே   உளதாம்.
மெய்ம்மை  நோக்காமுன்   மனத்துளது   போன்று  காட்டியும், பின்
நோக்கிய  வழிப்பயின்ற  இனத்துளதாயும்  இருத்தலின் ''காட்டி'' என
இறந்த     காலத்தால்     கூறினார்.    ''விசேட   உணர்வுதானும்''்
மனத்தின்கண்ணே  அன்றேயுளதாவது''?  என்பாரை நோக்கி ஆண்டு்
புலப்படும்   துணையே  உள்ளது:  அதற்கு  மூலம்  இனம்  என்பது
இதனான் கூறப்பட்டது. மனம்தூய்மை செய்வினை தூய்மை  இரண்டும்
இனம்தூய்மை  தூவா  வரும்.  அவ்விசேட  உணர்வு புலப்படுவதற்கு
இடனாய  மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை  தூயனாதல்
தன்மையும்  ஆகிய  இரண்டும், ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை
பற்றுக்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)