Primary tabs


கூட்டி உம்மை மாற்றி
உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின்
நீக்கித்
துயர்உறாமல் காத்தலின்
அதனைத் ''துணை'' என்றும்,
தீயினம் அறிவின்
நீக்கித் துயர் உறுவித்தலின்
அதனைப் ''பகை''
என்றும் கூறினார். ''அல்லல்
படுப்பது'' என்பது ஏதுப்பெயர். இதனான்
விதி
எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன. அஃதாவது,
அரசன் தான்
செய்யும் வினைகளை
ஆராய்ந்து செய்யும் திறம்; அச்செயல்
பெரியாரைத்
துணைக்கோடல் பயனுடைத்தாயவழி
அவரோடும்
செய்யப்படுவது ஆகலின்,
இதுசிற்றினம் சேராமையின்
பின்
வைக்கப்பட்டது. அழிவதூஉம்
ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். வினைசெய்யுங்கால் அப்பொழுது
அதனால் அழிவதையும், அழிந்தால் பின் ஆவதனையும், ஆய் நின்று
பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சீர் தூக்கி உறுவதாயின்
செய்க.
உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும்
அது வளர்ந்து வருதல்.
அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும்
ஆக்கத்தை ''ஊதியம''் என்றார். எனவே, அவ்வூதியம்
பெறின்
நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று
அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை
தெரிந்து செய்க என்பதாம். தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச்
செய்வார்க் கரும்பொருள் யாதொன்றும் இல். தாம் தெரிந்துகொண்ட
இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும்
எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு, எய்துதற்கரிய பொருள்
யாதொன்றும்
இல்லை. ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து
போந்த
இனம் என்றுமாம். ''செய

