தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   184


செய்து  கொள்ளப்படாமையின்  ''எய்தற்கு  அரியது''  என்றும், அது
தானே  வந்து  இயைதல்  அரிதாகலின்,  ''இயைந்தக்கால்''  என்றும்,
இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், ''அந்நிலையே'' என்றும் அது
பெறாவழிச்   செய்யப்படாமையின்   ''செய்தற்கு   அரிய''   என்றும்
கூறினார்.   இதனால்   காலம்  வந்துழி  விரைந்து  செய்க  என்பது
கூறப்பட்டது.  கொக்கொக்க  கூம்பும்  பருவத்து மற்றதன் குத்தொக்க
சீர்த்த   இடத்து.   வினைமேற்செல்லாதிருக்கும்  காலத்துக்  கொக்கு
இருக்குமாறு  போல  இருக்க,  மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி,
அது  செய்து  முடிக்குமாறு  போலத் தப்பாமல் செய்து முடிக்க. மீன்
கோடற்கு  இருக்கும்வழி,  அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து
தப்பாமைப்பொருட்டு   உயிரில்லதுபோன்று   இருக்கும்  ஆகலானும்,
எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும்  ஆகலானும்,
இருப்பிற்கும்  செயலிற்கும்  கொக்குஉவமையாயிற்று.  ''கொக்கு  ஒக்க''
என்றாராயினும்,  ''அதுகூம்புமாறு  போலக்  கூம்புக''  என்றும்  குத்து
ஒக்க  என்றாராயினும்  அது  ''குத்துமாறுபோலக்  குத்துக''   என்றும்
உரைக்கப்படும்.  இது  தொழிலுவமம்.  ஆகலின்  உவமை முகத்தான்
இருப்பிற்கும்  செயலிற்கும்இலக்கணம்  கூறியவாறாயிற்று.  அஃதாவது
,வலியும்  காலமும்  அறிந்து  பகைமேற்செல்வான், தான் வெல்லுதற்கு
ஏற்ற   நிலத்தினை   அறிதல்.   அதிகார  முறைமையும்  இதனானே
விளங்கும். தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்  இடங்கண்ட
பின்அல்  லது  பகைவரை  முற்றுதற்கு  ஆவதோர் இடம் பெற்றபின்
அல்லது,  அவர்மாட்டு  யாதொரு  வினையையும்  தொடங்காதொழிக,
அவரைச்   சிறியர்   என்று  இகழாதொழிக.  முற்றுதல்:  வளைத்தல்.
அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும்
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)