தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   193


முமாக   உரைக்கப்பட்டன.    இடையூறுகளாவன:  அரசன்,  வினை
செய்வார்,   சுற்றத்தார், பகைவர்,  கள்வர்  என்று  இவரான்  வரும்
நலிவுகள்.    அன்பறிவு    தேற்றம்    அவாஇன்மை   இந்நான்கும்
நன்குடையான்  கட்டே தெளிவு. அரசன் மாட்டு அன்பும்,  அவனுக்கு
ஆவன   அறியும்  அறிவும்,  அவை  செய்தற்கண்  கலங்காமையும்,
அவற்றால்  பொருள்  கையுற்ற  வழி  அதன்மேல் அவா இன்மையும்
ஆகிய,  இந்நான்கு  குணங்களையும்  நிலைபெற உடையான் மேலதே
வினையை  விட்டிருக்கும்  தெளிவு. இந்நான்கும் நன்குடைமை  இவன்
செய்கின்ற   வினைக்கண்  யாதும்ஆராய  வேண்டுவதில்லை  என்று
அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக்
கூறினார்.   இவைமூன்று  பாட்டானும்  ஆடற்குரியானது  இலக்கணம்
கூறப்பட்டது.  எனைவகையான்  தேறியக் கண்ணும்  வினைவகையான்
வேறாகும்  மாந்தர்  பலர்.  எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து
வினைவைத்த  பின்னும்,  அவ்  வினையின்  இயல்பானே  வேறுபடும்
மாந்தர்  உலகத்துப்  பலர். கட்டியங்காரன்போல அரச  இன்பத்தினை
வெஃகி  விகாரப்படுவதல்லது,  அதனைக்குற்றம்  என்று  ஒழிந்து தம்
இயல்பின்   நிற்பார்  அரியர்  ஆகலின்,  வேறாகும்  மாந்தர்  பலர்
என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய்,
வைத்தபின்  விகாரப்படுவாரை  இடையாயதொரு  வினையை வைத்து
அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார்
இவர்  என்பது  கூறப்பட்டது.  அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்
வினைதான்  சிறந்தானென் றேவற்பாற் றன்று. செய்யும்  உபாயங்களை
அறிந்து   செயலானும்   இடையூறுகளானும்  வரும்   துன்பங்களைப்
பொறுத்து   முடிவுசெய்ய   வல்லானையல்லது,   வினைதான்  இவன்
நம்மாட்டு    அன்புடையன்    என்று    பிறனொருவனை    ஏவும்
இயல்புடைத்தன்று.  ''செய்கிற்பாற்கு''  என்பது  வேற்றுமை   மயக்கம்.
அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)