Primary tabs
தமிழ்மொழியில் நல்லதொரு மென்பொருள் (software) உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனும், தமிழைக் கணினியில் (computer) கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சிக்கு உறுதுணையாக நிற்கும் வகையிலும் மொழியியல் (linguistics) அடிப்படையிலான இலக்கணக்குறிப்புடன் கூடிய தமிழ் விரிதரவு (annotated corpus) தயாரிக்கும் பணி நடந்தேறி வருகிறது.
இவ்விரிதரவுப் பணிக்காகத் தமிழ் இணையக்கல்விக் கழகம் தனது மின்நூலகத்திலுள்ள அனைத்து நூல்களின் சொற்களுக்கும் மொழியியல் அடிப்படையிலான இலக்கணக்குறிப்பை அளித்து வருகிறது. இவ்விரிதரவினை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தமிழுக்கான மென்பொருள் உருவாக்குவோர் எடுத்து கையாளும் வகையில் ஒரு பரந்துபட்டத் தேடுபொறி வசதியுடன் (Advanced search engine) த.இ.க. அமைத்துள்ளது. இது நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
இதுபோன்ற ஒரு விரிதரவு தமிழ்மொழியில் இதுநாள் வரை நடைபெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி
An Electronic Dictionary with Pronunciation
உச்சரிப்புடன் கூடிய மின் அகராதியின் முகப்பில் சொல் தேடுதல் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அப்பக்கத்தில் பொருள், அடுக்குநிலை என்ற இரு tabகள் இருக்கின்றன.

பொருள் என்ற tab இன் மூலம் தேடும் சொல்லின் பொருளைத் தேடிப்பெறலாம். மேலும் இதே பக்கத்தில் சொல் என்ற பகுதியின் அருகில் விசைப்பலகையின் உருவத்தினைச் சுட்டி அதன் மூலம் தேடவேண்டியச் சொல்லைத் தட்டச்சு செய்து தேடு என்ற பொத்தானை அழுத்தினால் தேடப்படும் சொல்லுக்கான
போன்றவைகள் கிடைக்கும்.

இத்தேடுதல் பகுதியின் கீழ் தமிழ் எழுத்துகளுக்கான ஒலி வடிவம் மற்றும் ஒலிப்பெயர்ப்பின் அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. ஒலி வடிவம் IPA அட்டவணையைத் தழுவியும் ஒலிப்பெயர்ப்பு, சென்னைப் பல்கலைக்கழக Tamil Lexicon யைப் பின்பற்றியும் அமைந்துள்ளன.

அடுக்குநிலை என்ற tabயைத் தேர்வு செய்தால் தேடியச் சொல்லின் அடுக்குநிலைகளைச் சுட்டிக்காட்டும்.
