தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Database Of Thamlzhagam

  • பெரிய பச்சைக் கிளி்

     

    கிளி வகைகளிலேயே அளவில் மிகவும் பெரிதாக இருப்பதால் பெரிய பச்சைக் கிளி என்ற பெயர் வந்தது. அலெக்ஸாண்டர் கிளி என்ற பெயரும் இதற்கு உண்டு.

    அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது பஞ்சாபில் இந்தக் கிளிகளைப் பார்த்து அசந்து போய் இவற்றைக் கொண்டு போய் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தியதால் இந்தப் பெயரிலும் இக் கிளி அழைக்கப்படுகிறது.

    இந்தியா, மற்றும் ஜெர்மனி, பெல்ஜியம், கிரீஸ், துருக்கி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்தக் கிளிகள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளன.

    முழுவதும் பச்சை நிறத்தில் இருக்கும். கன்னம் மட்டும் நீலமும் சாம்பலும் கலந்து பளபளவென்று இருக்கும். வயிற்றுப் பகுதி மஞ்சள் கலந்த பச்சை நிறம். பெரிய சிறகுகளின் மத்தியில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறம் மேலும் இதற்கு அழகூட்டும்.

    நீண்ட வாலைக் கொண்டிருக்கும். அலகு முற்றிலும் சிவப்பாக இருக்கும்.

    தலையிலிருந்து வால் வரை நீளம் 58 செ.மீ. இருக்கும். சிறகுகளை விரித்தால் 21 செ.மீ. இருக்கும். எடை 300 கிராம் வரை.

    ஒரு சமயத்தில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். 28 நாட்களில் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும்.

    தாய்ப்பறவை 3 மாதங்கள் வரை தனது குஞ்சுகளை மிகவும் கவனத்துடன் வளர்க்கும்.

    விதைகள், கொட்டைகள், பழங்கள், பூக்களின் மொட்டுகள் ஆகியவற்றை விரும்பிச் சாப்பிடும்.

    மனிதர்களோடு எளிதில் பழகிவிடுவதால் இதை வீடுகளில் வளர்க்கிறார்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:29:35(இந்திய நேரம்)