தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மேற்கு மலைத் தொடர்கள்

  • மேற்கு மலைத் தொடர்கள்

    தமிழ்நாட்டில் மேற்குத் மலைத் தொடர்ச்சி நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது. இவற்றின் சராசரி உயரம் 1000 மீட்டர்கள் முதல் 1500 மீட்டர்கள் வரை உள்ளன. தமிழ்நாட்டின் மலைத்தொடரின் பெருமளவு உயரமான முகடுகள் (சிகரங்கள்)தொட்டபெட்டா (2620 மீ.) மற்றும் முக்கூர்த்தி( 2540 மீ) ஆகும்.

    மேற்கு மலைத் தொடர்கள்

    மேற்கு மலைத்தொடரின் வடமேற்குப் பகுதியில் நீலகிரி உயர்நிலப்பகுதி சுமார் 2500 ச.மீ பரப்பில் பரவிக் காணப்படுகின்றது. இவ்வுயர் நிலப்பகுதியின் முகடு உயரம் 1800 மீட்டர் முதல் 2400 மீட்டர் ஆகும்.அவற்றில்தொட்டபெட்டா சிகரம் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த முகடாகும்.மேற்கு மலைத் தொடரும் கிழக்கு மலைத்தொடரும் நீலகிரி மலைப்பகுதியில் ஒன்று கூடுகின்றன.தமிழ்நாட்டின் நீலகிரியில் இருந்தும் கேரளாவின் ஆனைமுடி மலையில் இருந்தும் சுமார் 1500மீட்டர்கள் முதல் 2000 மீட்டர் வரை உயரமுள்ள ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கிச் செல்கின்றது.இதற்குப் பழனிக்குன்றுகள் என்று பெயர்.பழனிக்குன்றுகளுக்குத் தெற்கே வருச நாடு,ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.மேற்குத் தொடர்ச்சி மலைகள் இடைவெளியற்று காணப்பட்டாலும் பாலக்காடு அருகே 25.கி.மீ நீளத்தில் ஓர் கணவாய் காணப்படுகின்றாது. இது பாலக்காட்டுக் கணவாய் எனப்படும்.பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே ஆண்டிப்பட்டி மலை,ஏலமலை, அகத்தியமலை ஆகிய மலைகள் உள்ளன.வருச நாடு மலைக்கும் அகத்திய மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டைக் கணவாய் என அழைக்கப்படுகிறது.
    சமவெளிகளையும் உயர் நிலப்பகுதிகளையும் பீட பூமிகளையும்(பீட பூமி = உயர் நிலம்) பிரிக்கும் தமிழ்நாட்டின் மலைகளுக்கு இடையே இரண்டு குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுகின்றன.அவை தெற்கில் ஆத்தூர் கணவாய் என்றும், வடக்கில் செங்கம் கணவாய் என்றும் அழைக்கப்படுகிறன. இக்கணவாய் கடலூர் மாவட்டத்தைச் சமவெளிப்பகுதியோடும், சேலம் மாவட்டத்தை உயர் நிலப் பகுதியோடும் இணைக்கிறது.இடைவெளியற்று நீளும் மேற்கு மலைத் தொடர்களை குறிப்பிடத்தக்கக் கணவாய்கள் பாலக்காடும் செங்கோட்டையும் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 18:39:49(இந்திய நேரம்)