தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெட்டி வேர்

  • வெட்டி வேர்

    முனைவர் மரு.பெ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    வேறு பெயர்கள் : குருவேர், வெட்டிவேர் இருவேலி

    ஆங்கிலப் பெயர் : Cuscus grass

    தாவரவியல் பெயர் : Vetiveria zizanoides L .

    மருத்துவப் பயன்கள் :

    - வெட்டி வேரை நீரில் ஊறவைத்து, 30-60 மி.லி வரை சாப்பிட்டால் வயிற்று நோய்கள், சுரம் தீரும்.

    - வெட்டி வேர், விலாமிச்சை வேர், பாசிப்பயிறு, சந்தனம் இவற்றைப் பொடித்துக் கொண்டு பன்னீரில் கலந்து தடவி வந்தால் வெயில் காலத்தில் காணும் வேர்க்குரு தீரும்.

    - குடிநீரில் வெட்டி வேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிக தாகம் தீரும். உடல் வெப்பம் குறையும்.

    - வேர்ப்பொடியைக் காலரா நோயில் காணும் வாந்திக்கு வழங்கலாம்.

    - வெட்டி வேரினால் செய்யப்படும் இருக்கைகள், மூலநோய் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரத்தைக் குறைத்து நன்மை பயக்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:02:04(இந்திய நேரம்)