தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாதுளை

  • மாதுளை

    முனைவர் மரு.பெ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    வேறு பெயர்கள் : மாதளை, மாதுளங்கம், தாடிமம், மாதுளம்

    ஆங்கிலப் பெயர் : Pomagranate

    தாவரவியல் பெயர் : Punica granatum .

    செய்கைகள் (Actions)

    துவர்ப்பி - Astringent
    குருதிப்பெருக்கடக்கி - Styptic
    ஆண்மைப் பெருக்கி - Aphrodisiac

    மருத்துவப் பயன்கள் :

    - மாதுளம் பூ மொட்டை உலர்த்திப் பொடித்து உள்ளுக்கு அருந்த இருமல் தீரும்.

    - மாதுளம் பூவின் சாறு, அறுகம்புல்லின் சாறு இரண்டும் சமமாகக் கலந்து அருந்த மூக்கிலிருந்து வடியும் குருதி நிற்கும்.

    - மாதுளம் பூச்சூரணம் 4 கி, வேலம் பிசின் 4 கி, அபின் 200 மி.கி சேர்த்து கலந்து கொண்டு 300 மி.கி அளவு சாப்பிட குருதிக் கழிச்சல், இரத்த மூலம் தீரும்.

    - மாதுளம் பட்டைச் சாறை உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுப்புழுவைக் கொல்லும்.

    - மாதுளை மணப்பாகு அழலைப் போக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும். சுரத்தில் காணும் தாகம் தீர்க்கும்.

    - மாதுளம் பழத்தை உண்டு வந்தால் ஆண்மை பெருகும்.

    - மாதுளை வேர்ப்பட்டை, விதைப்பொடி சமஅளவு சேர்த்துப் பொடித்து காலை, மாலை உண்டு வர பிள்ளைப் பேறு உண்டாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:07:17(இந்திய நேரம்)