தொடர்வண்டி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்து கொண்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் மனித வாழ்வில் மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றன. எளிமையான முறையில் ஆற்றல் மிக்க வேலைகளைச் செய்துமுடிக்க இந்தக் கண்டுபிடிப்புகள் உதவி வருகின்றன. அவ்வகையில் அறிவியலின் ஓர் அரிய கண்டுபிடிப்புதான் தொடர்வண்டி. தொடக்ககாலத்தில் புகைவண்டி என்ற சொல்லே பயன்படுத்தப்பெற்று வந்தது உங்களுக்கெல்லாம் தெரியும். தொடர்வண்டியைப் பற்றிய தகவல்களை இந்தப் பாடம் உங்களுக்கு விளக்குகின்றது.