11. தொடர்வண்டி

தொடர்வண்டி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  தொடர்வண்டியை முதன்முதலாகக் கண்டுபிடித்தவர் யார்?

அ) சேம்சு வாட்

ஆ) ஸ்டீபன்சன்

இ) கிரகாம்பெல்

ஈ) ஜார்ஜ் ஸ்டீபன்சன்

ஈ) ஜார்ஜ் ஸ்டீபன்சன்

2.  தொடர்வண்டியின் தலை போன்ற பகுதி எது?

அ) எஞ்சின்

ஆ) பெட்டி

இ) ஓடுபாதை

ஈ) தலை

அ) எஞ்சின்

3.  தொடர் வண்டி முதன் முதலில் எந்த ஆற்றலால் ஓடியது?

அ) கட்டை

ஆ) நிலக்கரி

இ) நீராவி

ஈ) டீசல்

இ) நீராவி

4.  பழைய நீராவி எரிபொருளால் இயக்கப்பெறும் தொடர் வண்டி இன்றும் எந்த மலையில் செல்கிறது?

அ) கொடைக்கானல்

ஆ) ஆலிப்சு

இ) உதகை

ஈ) இமயமலை

இ) உதகை

5.  கடலின் மேற்பரப்பில் தொடர்வண்டி செல்லும் ஊர் எது?

அ) சென்னை

ஆ) கொல்கத்தா

இ) தில்லி

ஈ) இராமேசுவரம்

ஈ) இராமேசுவரம்

6.  பறக்கும் தொடர்வண்டி பயன்படுத்தப்பெறும் ஊர் எது?

அ) சென்னை

ஆ) பெங்களூர்

இ) திருச்சி

ஈ) புதுக்கோட்டை

அ) சென்னை

7.  சுரங்கப் பாதைத் தொடர்வண்டிகள் எங்கு ஓடுகின்றன?

அ) இந்தியா

ஆ) இலங்கை

இ) சென்னை

ஈ) மேலைநாடுகள்

ஈ) மேலைநாடுகள்

8.  பச்சை விளக்கு எரிந்தால் தொடர்வண்டி என்ன செய்யும்?

அ) கிளம்பும்

ஆ) நிற்கும்

இ) எதுவும் செய்யாது

ஈ) தயாராகும்

அ) கிளம்பும்

9.  சப்பானில் ஓடும் தொடர் வண்டி எது?

அ) குண்டுவேக வண்டி

ஆ) விரைவு வண்டி

இ) அதி விரைவு வண்டி

ஈ) காந்த மிதவை வண்டி

அ) குண்டுவேக வண்டி

10.  தொடர் வண்டி என்ற வழக்குச்சொல் சரியா?

அ) இல்லை

ஆ) சரி

இ) தவறு

ஈ) ஒருபகுதி சரி

அ) சரி