தொடர்வண்டி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. தொடர் வண்டியின் பழைய பெயர் ---------------.
தொடர் வண்டியின் பழைய பெயர் புகைவண்டி
2. இந்தியாவில் பயன்படுத்தப்பெறும் இயற்கை எரிபொருள் ------------.
இந்தியாவில் பயன்படுத்தப்பெறும் இயற்கை எரிபொருள் காட்டு ஆமணக்கு என்ற செடியில் இருந்து எடுக்கப்பெறும் எண்ணெய்
3. தொடர்வண்டி -----------, ----------, -----------, ------------ எரிபொருள்களில் ஓடும்.
தொடர்வண்டி நிலக்கரி, டீசல், எரிவாயு, இயற்கை வாயு எரிபொருள்களில் ஓடும்.
4. -------- மலைக்குத் தொடர் வண்டியில் போவது சிறப்பு.
உதகை மலைக்குத் தொடர் வண்டியில் போவது சிறப்பு
5. கடலில் தொடர்வண்டி போகும் ஊர் ------------------.
கடலில் தொடர்வண்டி போகும் ஊர் இராமேசுவரம்
6. பொருள்களை ஏற்றிப் போகும் தொடர்வண்டியை ----------- என்று அழைக்கலாம்.
பொருள்களை ஏற்றிப் போகும் தொடர்வண்டியை சரக்குத் தொடர் வண்டி என்று அழைக்கலாம்.
7. உணவு, உறங்கும் வசதி உள்ள தொடர்வண்டி நீண்ட ----------- போகும் வண்டி.
உணவு, உறங்கும் வசதி உள்ள தொடர்வண்டி நீண்ட நாள் /தொலைவு போகும் வண்டி.
8. குண்டுவேகத் தொடர் வண்டி ------------- நாட்டில் அதிகம்.
குண்டுவேகத் தொடர் வண்டி சப்பான், செர்மனி நாட்டில் அதிகம் .
9. குண்டுவேகத் தொடர்வண்டியின் வேகம் ஒரு மணிக்கு ------------. கிலோமீட்டர்.
குண்டுவேகத் தொடர்வண்டியின் வேகம் ஒரு மணிக்கு 350 கிலோமீட்டர்.
10. தொடர்வண்டிக் கண்டுபிடிப்பு உலகைச் --------- ஆக்கியதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
தொடர்வண்டிக் கண்டுபிடிப்பு உலகைச் சிற்றூர் ஆக்கியதில் பெரும்பங்கு வகிக்கின்றது.