தொடர்வண்டி
பயிற்சி - 4
Exercise 4
1. ஜார்ஜ் ஸ்டீபன்சன் எங்கு வேலை பார்த்தார்?
ஜார்ஜ் ஸ்டீபன்சன் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்த்தார்.
2. ஜார்ஜ் ஸ்டீபன்சன் தொடர்வண்டியைக் கண்டுபிடிக்க வேண்டியத் தேவை எதுவாக இருந்தது?
நிலக்கரியை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லத் தொடர்வண்டித் தேவைப்பட்டது.
3. நீராவி எவ்வாறு முதன் முதலில் உருவாக்கப் பெற்றுத் தொடர்வண்டியில் பயன்படுத்தப் பெற்றது?
மரக்கட்டைகளையும் நிலக்கரியையும் எரித்து நீர் சூடாக்கப் பெற்று நீராவி உருவாக்கப் பெற்றது.
4. தொடர்வண்டிக்கு எஞ்சின் எது போன்றது?
தொடர்வண்டிக்கு எஞ்சின் தலை போன்றது.
5. இந்தியாவில் பயன்பெறும் இயற்கை எரிபொருள் எது?
இந்தியாவில் பயன்பெறும் இயற்கை எரிபொருள் காட்டு ஆமணக்குச் செடியில் இருந்து கிடைக்கும் எண்ணெய் ஆகும்.
6. தொடர்வண்டி அடிப்படையில் எவ்வகையில் பயன்படுகின்றது?
தொடர்வண்டி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், சரக்குகளை ஏற்றிச் செல்லுதல் ஆகியவற்றில் பயன்படுகின்றது.
7. பொம்மைத் தொடர்வண்டிகள் எங்கு பயனாகின்றன?
பொம்மைத் தொடர்வண்டிகள் பூங்காக்களைச் சுற்றிப்பார்க்கவும், குழந்தைகளை மகிழ்விக்கவும் பயனாகின்றன.
8. மக்களை ஏற்றிச் செல்லும் தொடர்வண்டிகளின் வகைகள் இரண்டனைக் கூறுக.
விரைவு வண்டி, நகரங்களை இணைக்கும் புறநகர் வண்டி ஆகியவை மக்களை ஏற்றிச் செல்லும் தொடர் வண்டிகளின் இரு வகைகள் ஆகும்.
9. தொடர்வண்டியில் கிடைக்கும் வசதிகள் யாவை?
தொடர்வண்டியில் வீட்டில் கிடைக்கும் படுக்கை, உணவு, கழிப்பிட வசதி ஆகிய அனைத்தும் உண்டு.
10. பறக்கும் தொடர்வண்டி என்பது என்ன?
நிலத்தின் மேலே பாலம் போன்ற அமைப்பைக் கட்டி அதன் வழியாகச் செல்வது பறக்கும் தொடர்வண்டி ஆகும்.