14. பெயரும் வினையும்

பெயரும் வினையும்

பாட அறிமுகம்
Introduction to Lesson


முன்னர் அறுவகைப் பெயர்ச்சொற்கள் பற்றிப் பொதுவாக அறிந்த நீங்கள் இப்பாடப் பகுப்பில் பண்புப் பெயர், தொழிற்பெயர், வினையால் அணையும் பெயர், ஆகுபெயர் முதலான வகைகளைப் பற்றிய இலக்கணங்களைக் கற்று உணர உள்ளீர்கள். அவ்வாறே வினை முற்று வகைகளானஉடன்பாடு, எதிர்மறை, ஏவல், வியங்கோள் பற்றியும், முற்றெச்சம், எச்ச வாய்பாடுகள் பற்றியும் இப்பாடத் தொகுப்பில் கற்றுத் தெளியலாம்.