14. பெயரும் வினையும்

பெயரும் வினையும்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  பண்பு என்பதை ----------- என்றும் கூறுவர்.

பண்பு என்பதை குணம் என்றும் கூறுவர்.

2.  பெரும்பாலான பண்புப்பெயர்கள் ----------- விகுதி பெறும்.

பெரும்பாலான பண்புப்பெயர்கள் மை விகுதி பெறும்.

3.  அல், தல் என்பன --------- விகுதிகள்.

அல், தல் என்பன தொழிற்பெயர் விகுதிகள்.

4.  ஒருவனுக்கு அவன் செய்த செயலால் அமையும் பெயர் --------- ஆகும்.

ஒருவனுக்கு அவன் செய்த செயலால் அமையும் பெயர் வினையால் அணையும் பெயர் ஆகும்.

5.  ஓர் உவமை பொருளுக்கு ஆகிவருவது ------------ ஆகும்.

ஓர் உவமை பொருளுக்கு ஆகிவருவது உவமையாகு பெயர்ஆகும்.

6.  செயல் நிகழ்வதை உணர்த்துவது ------------ ஆகும்.

செயல் நிகழ்வதை உணர்த்துவது உடன்பாட்டு வினைஆகும்.

7.  பாடுவீர் என்பது ------------ வினைமுற்று ஆகும்.

பாடுவீர் என்பதுஏவல் வினை வினைமுற்று ஆகும்.

8.  ஏவல் வினைமுற்றுக்கு ஒருமை, பண்மை வேறுபாடு ------------ .

ஏவல் வினைமுற்றுக்கு ஒருமை, பண்மை வேறுபாடு உண்டு.

9.  படித்த என்பது ------------ ஆகும்.

படித்த என்பது பெயரெச்சம் ஆகும்.

10.  செய்து என்பது ------------ வாய்பாடு ஆகும்.

செய்து என்பது வினையெச்ச வாய்பாடு ஆகும்.