14. பெயரும் வினையும்

பெயரும் வினையும்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  பண்புப் பெயர்கள் எத்தனை வகைகளில் அமைகின்றன?

நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது.

2.  தொழிற்பெயரின் இரு நிலைகளைக் கூறுக?

தொழிற்பெயரின் இருநிலைகள்
(1) முதல்நிலைத் தொழிற் பெயர்
(2) முதல் நிலைத் திரிந்தத் தொழிற்பெயர்.

3.  செயல் செய்தவரைக் குறிக்கும் பெயர் எது?

செயல் செய்தவரைக் குறிக்கும் பெயர் வினையாலணையும் பெயர்.

4.  ஆகு பெயர் எத்தனை வகைபெறும்?

ஆகுபெயர் பதினாறு வகைபெறும்.

5.  நாலும், இரண்டும் என்பன எவற்றிற்கு ஆகிவந்தன?

நாலும், இரண்டும் என்பன முறையே நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் ஆகிவந்தன.

6.  செயல் நிகழாமையை வெளிப்படுத்தும் வினை எது?

செயல் நிகழாமையை வெளிப்படுத்தும் வினை எதிர்மறை வினை.

7.  வியங்கோள் வினைமுற்று எந்தெந்தப் பொருள்களில் வரும்?

வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் என்னும் பொருள்களில் வரும்.

8.  எச்சம் எத்தனை வகைபெறும்?

எச்சம் இரண்டு வகைபெறும்.

9.  பெயரெச்ச வாய்பாடுகள் எத்தனை?

பெயரெச்ச வாய்பாடுகள் மூன்று ஆகும்.

10.  செய என்பது எதற்குரிய வாய்பாடு?

செய என்பது நிகழ்கால வினையெச்ச வாய்பாடு ஆகும்.