18. பொருள்

பொருள்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

எழுத்து, சொல், பொருள் என்னும் படிநிலையில் அமைந்த தமிழ் இலக்கணம் அறிவியல் சார்ந்த படிநிலை வளர்ச்சியை உடையது. ஓர் எழுத்தே சொல்லாகலாம். ஒன்றனுக்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து சொல் அமையலாம். அவ்வாறு உருவாகும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் உண்டு. அதனைச் சொற்பொருள் என்பர். அது அடிப்படை நிலை. அதன் மேலாகத் தமிழில் சொற்களைக்கொண்டு பாடப்பெறும் செய்யுளின் பாடுபொருளையே (Content) பொருள் இலக்கணமாகக் கூறுவர். அது அகப்பொருள், புறப்பொருள் என்னும் இரு வகைகளில் அமையும்.