18. பொருள்

பொருள்

பாட அறிமுகம்
Introduction to Lesson


இப்பாடம் சொற்பொருள், பாடுபொருள் என்னும் இரு வகையானப் பொருள் இலக்கணங்களையும் விளக்குவதாக அமைகின்றது. முற்பகுதி சொற்களுக்கான பொருள் காண்பதில் அமையும் குற்றங்கள் (வழு); அவற்றை நீக்குவது அல்லது ஏற்பது; சொற்கள் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் பொருள் தரும் நிலை; அடுக்கி நின்று பொருள் தருதல்; ஒரு பொருளுக்கே பல சொற்கள் அமைதல்; வினாவிலும், விடையிலும் சொற்கள் அமையும் முறை முதலான இலக்கணங்களைத் தெளிவாக்குகின்றது. பிற்பகுதி செய்யுளின் பாடுபொருளாகத் தமிழ் இலக்கண நூல்கள் வரையறுத்த அகப்பொருள், புறப்பொருள் பற்றிய அடிப்படை இலக்கணங்களை விளக்குவதாக அமைகின்றது.