18. பொருள்

பொருள்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  இலக்கணத்தில் பிழையைக் குறிக்கும் சொல்

அ) வழு

ஆ) வழா நிலை

இ) வழு அமைதி

ஈ) வழி

அ) வழு

2.  இலக்கணத்தில் வழு வகைகள்

அ) ஐந்து

ஆ) ஆறு

இ) ஏழு

ஈ) எட்டு

இ) ஏழு

3.  வாழ்க ! வாழ்க ! என்பது

அ) வியங்கோள் வினைமுற்று

ஆ) அடுக்குத் தொடர்

இ) இரட்டைக் கிளவி

ஈ) வினைமுற்று

ஆ) அடுக்குத் தொடர்

4.  வினா வகைகள்

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

ஈ) ஆறு

5.  விடை வகைகள்

அ) எட்டு

ஆ) ஏழு

இ) ஆறு

ஈ) ஐந்து

அ) எட்டு

6.  பொருள் இலக்கணம்

அ) இரு வகைபெறும்

ஆ) மூவகைபெறும்

இ) ஆறு வகைபெறும்

ஈ) வகைகளே இல்லை

அ) இரு வகைபெறும்

7.  அகப்பொருளின் உட்பிரிவுகள்

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

ஆ) மூன்று

8.  முதற்பொருளில் அடங்குவன

அ) நிலமும் இடமும்

ஆ) நிலமும் திணையும்

இ) நிலமும் பொழுதும்

ஈ) ஆண்டும் மாதமும்

(இ) நிலமும் பொழுதும்

9.  சித்திரை வைகாசி இரண்டும்

அ) முன் பனிக் காலம்

ஆ) பின் பனிக்காலம்

இ) முதுவேனில் காலம்

ஈ) இளவேனில் காலம்

ஈ) இளவேனில் காலம்

10.  எற்பாடு என்பது

அ) சூரியன் தோன்றும் நேரம்

ஆ) சூரியன் மறையும் நேரம்

இ) நள்ளிரவு நேரம்

ஈ) அதிகாலை நேரம்

ஆ) சூரியன் மறையும் நேரம்