பொருள்
மையக் கருத்து
General Idea
பொருள் இலக்கணம் என்னும் இப்பாடத்தொகுப்பில் சொற்பொருள், பாடுபொருள் என்னும் இருவகையிலும் அமைந்த பல்வேறு இலக்கணச் செய்திகள் கொடுக்கப்பெற்றுள்ளன. சொற்கள் அவற்றிற்குரிய பொருள் நிலையில் எவ்வாறெல்லாம் மாறி வழங்குகின்றன என்பதையும், அவற்றை எவ்வாறு ஏற்பது என்னும் பொது நிலையிலான செய்திகளையும் அறிந்தோம். மனித வாழ்க்கையின் இருபெரும் பிரிவுகளான அகம், புறம் பற்றிய இலக்கணச் செய்திகளையும் இப்பகுதி இனிது விளக்குவதாக அமைந்து உள்ளது.