18. பொருள்

பொருள்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  வழுஅமைதி என்றால் என்ன?

இலக்கணப்படி பிழை இருந்தாலும் ஒரு காரணம் கருதி ஏற்றுக் கொள்வது வழுஅமைதி எனப்பெறும்.

2.  காலங்கள் முரண்பாடாக அமையும் தொடரை எவ்வாறு அழைப்பர்?

காலங்கள் முரண்பாடாக அமையும் தொடரை காலவழு என்று அழைப்பர்.

3.  ஆயிரம் மக்கள் போரிட்டனர் என்னும் தொடரில் மக்கள் என்பது யாரைக் குறிக்கும்?

ஆயிரம் மக்கள் போரிட்டனர் என்னும் தொடரில் மக்கள் என்பது ஆடவரைக் குறிக்கும்.

4.  நீண்ட நெடிய பேராறு - இது எவ்வகை இலக்கணத்திற்கு உரியது?

நீண்ட நெடிய பேராறு என்பது ஒருபொருட் பன்மொழிக்கு உரியது

5.  ஏவல் வினாவிற்கு எடுத்துக்காட்டுத் தருக.

பாடலை மனப்பாடம் செய்து விட்டாயா? என்பது ஏவல் வினாவிற்கு எடுத்துக்காட்டு.

6.  இனமொழி விடை என்றால் என்ன?

நேரடியாக விடை கூறாமல் இனமான ஒன்றைக் கூறுவது இனமொழி விடை ஆகும்.

7.  உரிப்பொருள் என்றால் என்ன?

உரிப்பொருள் என்பது தலைமக்களின் வாழ்க்கை முறை.

8.  வைகறைக்குரிய நேரம் யாது?

வைகறைக்குரிய நேரம் இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.

9.  புறத்திணை எத்தனை வகைபெறும்?

புறத்திணை பன்னிரண்டு வகைபெறும்..

10.  மன்னனைப் புகழ்ந்து பாடும் திணை எது?

மன்னனைப் புகழ்ந்து பாடும் திணை பாடாண் திணை.