பொருள்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. அம்மா வந்தது என்பது ----------- வழு ஆகும்.
அம்மா வந்தது என்பதுதிணை வழு வழு ஆகும்.
2. மான் கன்று என்பது ----------- வழு அற்ற தொடராகும்.
மான் கன்று என்பதுமரபு வழு அற்ற தொடராகும்.
3. தலைக்கு நூறு ரூபாய் கொடு என்பதில் தலை என்பது --------- ஐக் குறிக்கும்.
தலைக்கு நூறு ரூபாய் கொடு என்பதில் தலை என்பது ஆள் ஐக் குறிக்கும்.
4. ஒரு பொருளுக்கே பல சொற்களை அடுக்கிச் சொல்வதை--------- என்பர்.
ஒரு பொருளுக்கே பல சொற்களை அடுக்கிச் சொல்வதை ஒருபொருட் பன்மொழி என்பர்.
5. ஒரு பொருளைப் பற்றி ஐயத்துடன் வினவுவது ------------ ஆகும்.
ஒரு பொருளைப் பற்றி ஐயத்துடன் வினவுவது ஐய வினா ஆகும்.
6. தனக்கு நிகழப்போகும் ஒன்றை விடையாகக் கூறுவது ------------ஆகும்.
தனக்கு நிகழப்போகும் ஒன்றை விடையாகக் கூறுவது உறுவது கூறல் ஆகும்.
7. அகப்பொருள் என்பது ------------ ஆகும்.
அகப்பொருள் என்பது பாடுபொருள் ஆகும்.
8. மக்கள் வாழும் நிலப்பகுதியை ------------ என்பர்.
மக்கள் வாழும் நிலப்பகுதியை முதற்பொருள் என்பர்.
9. மார்கழி, தை இரண்டும் ------------ காலம்.
மார்கழி, தை இரண்டும் முன்பனிக் காலம் காலம்.
10. பகைவரின் கோட்டையை முற்றுகையிடுவது ------------ ஆகும்.
பகைவரின் கோட்டையை முற்றுகையிடுவது உழிஞைத் திணை ஆகும்.