முகப்பு |
மான் (இரலை, உழை, வருடைமான், கலை, நவ்வி, மரை) |
65. முல்லை |
வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன் |
||
இன்புறு துணையொடு மறுவந்து உகள, |
||
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்- |
||
வாராது உறையுநர் வரல் நசைஇ |
||
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோவூர் கிழார் |
68. குறிஞ்சி |
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின் |
||
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும் |
||
அரும் பனி அற்சிரம் தீர்க்கும் |
||
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. |
உரை | |
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லை |
183. முல்லை |
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
||
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
||
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
||
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
||
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
||
மென் மயில் எருத்தின் தோன்றும் |
||
புன் புல வைப்பிற் கானத்தானே. |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |
187. குறிஞ்சி |
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி |
||
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி, |
||
பெரு வரை நீழல் உகளும் நாடன் |
||
கல்லினும் வலியன்-தோழி!- |
||
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே. |
உரை | |
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர் |
213. பாலை |
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக் |
||
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப் |
||
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல் |
||
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின் |
||
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி, |
||
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம் |
||
இன் துயில் முனிநர் சென்ற ஆறே. |
உரை | |
'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன் |
220. முல்லை |
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் |
||
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை |
||
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, |
||
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக் |
||
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் |
||
வண்டு சூழ் மாலையும், வாரார்; |
||
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே. |
உரை | |
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி |
232. பாலை |
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும், |
||
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?- |
||
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை, |
||
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய |
||
யாஅ வரி நிழல், துஞ்சும் |
||
மா இருஞ் சோலை மலை இறந்தோரே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை |
243. நெய்தல் |
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின் |
||
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை |
||
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே. |
உரை | |
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன் |
250. பாலை |
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு, |
||
இரலை நல் மான் நெறிமுதல் உகளும் |
||
மாலை வாரா அளவை, கால் இயல் |
||
கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப் |
||
பொரு கயல் முரணிய உண்கண் |
||
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே. |
உரை | |
தலைமகன் பாகற்கு உரைத்தது. - நாமலார் மகன் இளங்கண்ணன் |
256. பாலை |
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் |
||
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, |
||
மான் ஏறு உகளும் கானம் பிற்பட, |
||
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத் |
||
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச் |
||
சொல்லாமுன்னர், நில்லா ஆகி, |
||
நீர் விலங்கு அழுதல் ஆனா, |
||
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே. |
உரை | |
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. |
272. குறிஞ்சி |
தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட |
||
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த |
||
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த |
||
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர் |
||
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் |
||
குருதியொடு பறித்த செங் கோல் வாளி |
||
மாறு கொண்டன்ன உண்கண், |
||
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே! |
உரை | |
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஒரு சிறைப் பெரியன் |
282. பாலை |
செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த |
||
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை |
||
நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும் |
||
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை, |
||
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த |
||
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர் |
||
ஆர் கழல்பு உகுவ போல, |
||
சோர்குவஅல்ல என்பர்கொல்-நமரே? |
உரை | |
வினவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது. - நாகம் போத்தன் |
319. முல்லை |
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து, |
||
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும், |
||
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி, |
||
மை அணி மருங்கின் மலையகம் சேரவும், |
||
மாலை வந்தன்று, மாரி மா மழை; |
||
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் |
||
இன்னும் வாரார்ஆயின், |
||
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே |
உரை | |
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது.- தாயங் கண்ணன் |
321. குறிஞ்சி |
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், |
||
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், |
||
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- |
||
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; |
||
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, |
||
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், |
||
மறைத்தற் காலையோ அன்றே; |
||
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. |
உரை | |
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது. |
338. குறிஞ்சி |
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு |
||
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, |
||
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல, |
||
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை, |
||
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் |
||
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள் |
||
விளங்கு நகர் அடங்கிய கற்பின் |
||
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே. |
உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார் |
342. குறிஞ்சி |
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம் |
||
காவல் மறந்த கானவன், ஞாங்கர், |
||
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும் |
||
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக் |
||
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, |
||
நயந்தோர் புன்கண் தீர்க்கும் |
||
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே? |
உரை | |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார் |