ஏமத்தை - காவலுடையை
ஏமநீர் - உலகிற்குப் பாதுகாவலான நீர் (ப.தி.)
ஏமம் - காவல்; இன்பம்
ஏமவைகல் - இன்பமான நாள்
ஏமாக்க - செம்மாப்புற
ஏமாற்றல் - ஏமஞ்செய்தல்
ஏமுறு - இன்புறுகின்ற
ஏமுறும் - இன்பமுறும்
ஏய - ஏவிய
ஏய்க்கும் - ஒக்கும்
ஏய்ப்ப - ஒப்ப
ஏர்பு - எழுந்து
ஏல - எதிர்க்க
ஏலா - ஏடா
" - ஏற்காதனவாய்
ஏவலாளன் - பணிசெய்பவன்
ஏவல் - ஓதுதல்
ஏழு - அகங்காரம்
ஏழுறுமுனிவர் - சப்தரிஷிகள்
ஏழ் - ஏழாம்பருவம்
ஏழ்புழை - ஏழுதுளையுடைய குழல்
ஏறு - இடபராசி
" - இடி
ஏறுமாறு - பகை; ஓருலக வழக்கு
ஏற்பின் - ஏற்கின்றபொழுது
ஏற்ற - ஒத்த
ஏனோர் - நின்னை ஒழிந்தோர்
ஐ - வியப்பு
ஐ - தலைவன்
ஐந்தலை அரவம் - ஐந்துதலையுடைய பாம்பு
ஐந்தனுள்ளும் - ஐம்புலத்துள்ளும்
ஐந்திருள் - ஐம்பொறியானும் உண்டாகும் மயக்கம்
ஐந்து - ஓசையும் ஊறும் ஒளியும் சுவையும் நாற்றமும்
" - நாற்றம்
ஐம்புழை - ஐந்து துளையுடைய குழல்
ஐயர் - பார்ப்பார் (ப.தி.)
ஐயிருநூற்று மெய்ந்நயனத்தவன் - இந்திரன்
ஐவளம் - ஐந்துவகை வளம். அவை "அரக்கு இறலி
அணிமயிலின் பீலி திருத்தகு நாவியோடு ஐந்து"
ஐவிரைமாண்பகழி - ஐந்தாகிய மலரம்பு
ஐவர் - செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி
ஆகிய ஐந்து கோள்கள்
ஒசிபண்ப - முறிந்த அன்புடையோனே
ஒடியா - கெடாத
ஒடுக்கம் - அடங்குதல்
ஒட்டைமனம் - இளநெஞ்சம்
ஒண்சுடர் - ஒளியுடைய தீ
ஒண்மயில் - ஒளியுடைய மயில்
ஒண்மை - ஒளியுடைமை
ஒதுங்கி - பொருந்தி
ஒத்தன்று - ஒத்தது
ஒத்தி - ஒத்தனை
ஒய்ய - ஒளிய
ஒய்வார் - செலுத்துவார்
ஒரியவு - ஒற்றைவழி
ஒருகுழையொருவன் - பலதேவன்
ஒருக்க - ஒருமிக்க
ஒருசார் - ஒருபக்கம்
ஒருதிறம் - ஒருபக்கம்
ஒருநிலைப் பொய்கை - வற்றாத நீர் நிலை
ஒருபெண் - ஒரே பெண்
ஒருமையோடு - ஒரு பகுதியினாலே
ஒலி - சொல்
ஒலிதார் - தழைத்த மாலை
ஒலித்தன்று - ஒலித்தது
ஒலியல் - மாலை
ஒல்குபு - வளைந்து
ஒல்லுவ - பொறுப்பன
ஒல்லை - விரைவில்
ஒளி - கலவியாலெய்தியஒளி
ஒளியாவை - ஒளியுடையை
ஒளிறு - ஒளிவீசாநின்ற
ஒள்ளிணர் - ஒளியுடைய பூங்கொத்து