காந்தள் - ஒரு செடி
காமக்கடவுள் - வழிபடுந்தெய்வம்
காமக்கணிச்சி - காமமாகிய கோடரி
காமங்கெடும் - காமம் பதனழியும்
காமரு - விரும்புதற்குரிய
காமர் - அழகிய
காமவதுவை - காமநுகர்கின்ற திருமணம்
காமவேள் - மன்மதன்
காமன்படை - மன்மதனுடைய சேனை
காய்கனி - காயும் பழமும்
காரிகை - அழகிய
" - பெண்
காரிகை மது - அழகாகிய தேன்
காரிகையாக - அழகுண்டாக
காரில் - கார்காலத்தில்
காரேற்றன்று - கார்ப்பருவத்தை மேற்கொண்டது
காரேற்று - கார்ப்பருவத்தை அடைந்து
கார் - முகில்
கார்த்திகை - கார்த்திகை விண்மீன் - (ப.தி.)
கால - காலிலுள்ள
கால் - காற்று
" - வெள்ளக்கொழுந்து
கால்சீப்ப - விலக்க
கால்வழக்கு - காற்றியக்கம்
காவல - அரசனே
காழ் - நூல்
" - வடம்
காளை - முருகன்
கானல் - கடற்கரை
காணாமரப - அறியப்படாத மரபினோய்
கான் - மணம்
கான்யாறு - காட்டியாறு
கி
கிடை - நெட்டி
கிணை - ஒருவகை இசைக்கருவி
கில்லா - கூடா
கிழமை - ஆளத்தியின் றொழிலில் ஒன்று
" - உரிமை
கிழவர் - முதியவர்
கிழவியர் - முதிய மகளிர்
கிளக்குங்கால் - கூறுமிடத்து
கிளந்த - சொல்லப்பட்ட
கிளத்தலின் - கூறுதலால்
கிளப்ப - சொல்ல
கீ
கீண்டு - அகழ்ந்து
கீழோர் - உழவர்
கு
குஞ்சி - ஆண்மயிர்
குட - குடத்தினையுடையோய்
குடாரி - மழு
குடுமிய - உச்சியையுடையன
குடை - கடைந்த
குடைவர் - குளிப்பார்
குணக்கு - குணத்தில் (ப.தி.)
குந்தம் - ஒருபடைக்கலன்
குமர - முருகப்பெருமானே
குமுறிய - முழங்கிய
குரல் - ஓரிசை
குரல் - கதிர்
குரல் - கொத்து. கற்றை
குரு - நிறம் (ப.தி.)
குருகு - கிரௌஞ்சமலை
" - கிரௌஞ்சம்
" - குருக்கத்தி
" - குருத்து
" - நாரை
குருக்கத்தி - மாதவிக்கொடி
குருசில் - தலைவன்
குருதி - இரத்தம்
குருதித்து - குருதியின் தன்மையுடைத்து
குரும்பை - தெங்கிளங்காய்
குலவரை - சிறந்த மலை
குல்லை - கஞ்சங்குல்லை (கஞ்சா)
குவளை - ஒரு நீர்ப்பூ
" - ஒரு பேரெண்
குழல் - கூந்தல்