|
|
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் |
|
செல்க என்றோளே, அன்னை'' என, நீ |
|
சொல்லின் எவனோ?-தோழி!-''கொல்லை |
|
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த |
|
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை |
|
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும் |
|
ஆர் இருள் நடு நாள் வருதி; |
|
சாரல் நாட, வாரலோ'' எனவே. |
உரை |
|
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பெருங்கொல்லன் |
|
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ, |
|
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை |
|
தான் அறிந்தன்றோ இலளே-பானாள் |
|
பள்ளி யானையின் உயிர்த்து, என் |
|
உள்ளம், பின்னும், தன் உழையதுவே! |
உரை |
|
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர் |
|
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்; |
|
பழியும் அஞ்சும், பய மலை நாடன்; |
|
நில்லாமையே நிலையிற்று ஆகலின், |
|
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின் |
|
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத் |
|
தங்குதற்கு உரியது அன்று, நின் |
|
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே. |
உரை |
|
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். |
|
கழிய காவி குற்றும், கடல |
|
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே |
|
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர, |
|
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப் |
|
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ- |
|
செல் மழை தவழும் சென்னி |
|
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே! |
உரை |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன் |
|
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி- |
|
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி, |
|
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள் |
|
துஞ்சாது உறைநரொடு உசாவாத் |
|
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே. |
உரை |
|
வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கொல்லன் அழிசி |
|
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப் |
|
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?- |
|
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர், |
|
''நன்றுநன்று'' என்னும் மாக்களொடு |
|
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே. |
உரை |
|
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, ''வரைவு மறுப்பவோ?'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார். |
|
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன |
|
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை, |
|
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல, |
|
இன் துயில் எடுப்புதி-கனவே!- |
|
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே. |
உரை |
|
தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன் |
|
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த |
|
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் |
|
காசின் அன்ன போது ஈன் கொன்றை |
|
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும், |
|
''கார் அன்று'' என்றிஆயின், |
|
கனவோ மற்று இது? வினவுவல் யானே. |
உரை |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார். |
|
அளிதோ தானே-நாணே நம்மொடு |
|
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே, |
|
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை |
|
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு, |
|
தாங்கும் அளவைத் தாங்கி, |
|
காமம் நெரிதரக் கைந் நில்லாதே. |
உரை |
|
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
|
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி |
|
வான மீனின் வயின்வயின் இமைக்கும் |
|
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம் |
|
உள்ளின், உள் நோய் மல்கும்; |
|
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்! |
உரை |
|
இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது. - மாடலூர் கிழார் |
|