|
|
காண் இனி வாழி-தோழி-யாணர்க் |
|
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட |
|
மீன் வலை மாப் பட்டாஅங்கு, |
|
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே? |
உரை |
|
வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- பூங்கணுத்திரையார் |
|
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல் |
|
பழுமரம் படரும் பையுள் மாலை, |
|
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் |
|
தமியர் ஆக இனியர்கொல்லோ? |
|
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த |
|
உலை வாங்கு மிதி தோல் போலத் |
|
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே. |
உரை |
|
வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கச்சிப்பேட்டு நன்னாகையார் |
|
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த |
|
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப் |
|
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு, |
|
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப, |
|
''இன்னள் செய்தது இது'' என, முன் நின்று, |
|
அவள் பழி நுவலும், இவ் ஊர்; |
|
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே. |
உரை |
|
குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. - மதுரைக் காஞ்சிப் புலவன் |
|
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் |
|
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி |
|
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் |
|
அத்தம் அரிய என்னார், நத்துறந்து, |
|
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப் |
|
பொருளே மன்ற பொருளே; |
|
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. |
உரை |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி |
|
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி, |
|
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை, |
|
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் |
|
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு |
|
இரங்கேன்-தோழி!-''ஈங்கு என் கொல்?'' என்று, |
|
பிறர்பிறர் அறியக் கூறல் |
|
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே? |
உரை |
|
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன். |
|
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்; |
|
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என் |
|
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை, |
|
வரை முதிர் தேனின் போகியோனே- |
|
ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ? |
|
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த |
|
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே. |
உரை |
|
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது. - வருமுலையாரித்தி |
|
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, |
|
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே; |
|
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை |
|
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் |
|
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப் |
|
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் |
|
தணப்பு அருங் காமம் தண்டியோரே? |
உரை |
|
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன் |
|
அயிரை பரந்த அம் தண் பழனத்து |
|
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் |
|
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் |
|
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்; |
|
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு |
|
அரியம் ஆகிய காலைப் |
|
பெரிய நோன்றனிர்; நோகோ யானே. |
உரை |
|
கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை |
|
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி, |
|
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; |
|
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே; |
|
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த |
|
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப் |
|
பேதை யானை சுவைத்த |
|
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே. |
உரை |
|
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன் |
|
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி |
|
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, |
|
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன |
|
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, |
|
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் |
|
அவ் வரி வாடத் துறந்தோர் |
|
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? |
உரை |
|
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார் |
|