பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

114

வானதி

- வான் நதி கங்கை 197

விகட

- பெரிய 363,452

விகற்ப

-

வி+கல்ப, விசேடமாக உண்டாக்கப்பட்ட

193

விசிறு பட்டம்

- வீசும் ஆலவட்டம், உக்கம் 499

விடலை

- இளையோன 454

வித்தாரம்

- வெளி 546

விதிர்த்தல்

- படபடத்தல் 446

வியல்

- அகலம், விரிவு 499

விரகு

- சூது 143

வில்கரந்த

- ஒளி மறைந்த 490

வில் பவளக் கொப்பு

- ஒளி வீசும் பவளக்கொடி 107

விலாழி

- குதிரையின் வாய் நுரை 256

விளக்கு

- அந்திக் காப்பு 273

விளம்புதல்

- பரவுதல் 268

விளிதல்

- அழிதல்  

வீசி

- அலை 480

வீரபானம்

- வீரருக்கு உரிய மது 277

வெண்டலை

- தலை ஓடு 96

வெண்பிறை

- பூர்ணிமை 279

வெய்யோர்

- கொடியோர் 403

வெயில

- ஒளி, பிரதிபிம்பம் 36

வெள்ளம்

- ஓர் எண் 260

வெள்ளி

- அசுர குருவான சுக்கிரன் 305

வேடை

- வேட்கை (வேள் பகுதி) 268

வேளமடந்தையர்

-

பகைப் புலத்துச் சிறை பிடிக்கப்பட்ட   பெண்கள்

186

வேனிலான்

- மன்மதன்

வைரம்

-

வைரத்தில் ஓர் இனம் செந்நிறம் உடையது [பிற: வெண்மை, கருமை, பசுமை நிறம் உடையன]

109