புணர்ச்சி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
எழுத்துகள் பற்றியும், சொற்கள் பற்றியும் சென்ற பாடங்களில் படித்தோம். எழுத்துகள் சேர்ந்து நின்று பொருள் தருவது சொல். சொற்கள் சேர்ந்து நின்று முழுப்பொருளை உணர்த்துவது சொல் தொடர் (சொற்றொடர்).
சொற்கள் சேர்ந்து நிற்கும் முறையைப் புணர்ச்சி என்பர். புணர்தல் என்றால் சேர்தல் என்பது பொருள்.