புணர்ச்சி
பயிற்சி - 4
Exercise 4
1. பெயர்ச்சொல் முன் பெயர்ச்சொல் சேர்வதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
பெயர்ச்சொல் முன் பெயர்ச்சொல் சேர்வதற்கு எடுத்துக்காட்டு : இளங்கோ + புத்தகம்
2. பெயர்ச்சொல் முன் வினைச்சொல் சேர்வதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
பெயர்ச்சொல் முன் வினைச்சொல் சேர்வதற்கு எடுத்துக்காட்டு : இளங்கோ + படித்தான்
3. வினைச்சொல் முன் பெயர்ச்சொல் சேர்வதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
வினைச்சொல் முன் பெயர்ச்சொல் சேர்வதற்கு எடுத்துக்காட்டு : வந்தான் + இளங்கோ
4. வினைச்சொல் முன் வினைச்சொல் சேர்வதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
வினைச்சொல் முன் வினைச்சொல் சேர்வதற்கு எடுத்துக்காட்டு : ஓடி + விழுந்தான்.
5. உயிர் எழுத்து முன் உயிர் எழுத்து வந்து சேர்வதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
உயிர் எழுத்து முன் உயிர் எழுத்து வந்து சேர்வதற்கு எடுத்துக்காட்டு : பனை + ஓலை
6. உயிர் எழுத்து முன் மெய் எழுத்து வந்து சேர்வதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
உயிர் எழுத்து முன் மெய் எழுத்து வந்து சேர்வதற்கு எடுத்துக்காட்டு : பனை + மரம்
7. மெய் எழுத்து முன் உயிர் எழுத்து வந்து சேர்வதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
மெய் எழுத்து முன் உயிர் எழுத்து வந்து சேர்வதற்கு எடுத்துக்காட்டு : மலர் + அடி
8. மெய் எழுத்து முன் மெய் எழுத்து வந்து சேர்வதற்கு எடுத்துக்காட்டுத் தருக.
மெய் எழுத்து முன் மெய் எழுத்து வந்து சேர்வதற்கு எடுத்துக்காட்டு : மலர் + மாலை
9. கெடுதல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டுத் தருக.
கெடுதல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு : மரம் + வேர் = மரவேர்.
10. திரிதல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டுத் தருக.
திரிதல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு : பல் + பொடி = பற்பொடி.