புணர்ச்சி
பயிற்சி - 3
Exercise 3
1. புணர்ச்சி என்றால் என்ன பொருள்?
அ) சேர்தல்
ஆ) பிரிதல்
இ) சிரித்தல்
ஈ) அழுதல்
அ) சேர்தல்
2. பனை + மரம் என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
அ) உயிர் எழுத்து முன் உயிரெழுத்து
ஆ) உயிர் எழுத்து முன் மெய் எழுத்து
இ) மெய் எழுத்து முன் மெய்யெழுத்து
ஈ) மெய் எழுத்து முன் உயிர் எழுத்து
ஆ) உயிர் எழுத்து முன் மெய் எழுத்து
3. பனை + ஓலை என்பது எவ்வாறு வரும்?
அ) உயிர் எழுத்து முன் உயிரெழுத்து
ஆ) உயிர் எழுத்து முன் மெய் எழுத்து
இ) மெய் எழுத்து முன் மெய்யெழுத்து
ஈ) மெய் எழுத்து முன் உயிர் எழுத்து
அ) உயிர் எழுத்து முன் உயிரெழுத்து
4. மலர் + மாலை என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
அ) உயிர் எழுத்து முன் உயிரெழுத்து
ஆ) உயிர் எழுத்து முன் மெய் எழுத்து
இ) மெய் எழுத்து முன் மெய்யெழுத்து
ஈ) மெய் எழுத்து முன் உயிர் எழுத்து
இ) மெய் எழுத்து முன் மெய்யெழுத்து
5. மலர் + அடி என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
அ) உயிர் எழுத்து முன் உயிரெழுத்து
ஆ) உயிர் எழுத்து முன் மெய் எழுத்து
இ) மெய் எழுத்து முன் மெய்யெழுத்து
ஈ) மெய் எழுத்து முன் உயிர் எழுத்து
ஈ) மெய் எழுத்து முன் உயிர் எழுத்து
6. மா + காய் = மாங்காய் என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
அ) தோன்றல்
ஆ) கெடுதல்
இ) திரிதல்
ஈ) இயல்பு
அ) தோன்றல்
7. பல் + பொடி = பற்பொடி என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
அ) தோன்றல்
ஆ) கெடுதல்
இ) திரிதல்
ஈ) இயல்பு
இ) திரிதல்
8. மரம் + வேர் = மரவேர் என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
அ) தோன்றல்
ஆ) கெடுதல்
இ) திரிதல்
ஈ) இயல்பு
ஆ) கெடுதல்
9. பனை + மரம் என்பது எவ்வகைப் புணர்ச்சி?
அ) தோன்றல்
ஆ) கெடுதல்
இ) திரிதல்
ஈ) இயல்பு
ஈ) இயல்பு
10. புணர்ச்சியின் வகைகள் எத்தனை?
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) இரண்டு
ஈ) ஆறு
இ) இரண்டு