புணர்ச்சி

புணர்ச்சி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  'கண்ணன் வந்தான்' என்ற தொடரில் கண்ணன் என்பது நிலைமொழி.

சரி

2.  'கண்ணன் வந்தான்' என்ற தொடரில் வந்தான் என்பது வருமொழி.

சரி

3.  'கண்ணன் வந்தான்' என்பதில் பெயர்ச்சொல்லும் பெயர்ச் சொல்லும் சேர்ந்து நிற்கின்றன.

தவறு

4.  'கண்ணன் வந்தான்' என்பதில் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் சேர்ந்து நிற்கின்றன.

சரி

5.  'கண்ணன் வந்தான்' என்பதில் நிலைமொழியின் இறுதியில் மெய்யெழுத்து உள்ளது.

சரி

6.  'கண்ணன் வந்தான்' என்பதில் வருமொழியின் முதலில் மெய்யெழுத்து உள்ளது.

சரி

7.  புணர்ச்சியின் மற்றொரு முறை நிலைமொழியின் உயிர் எழுத்து முன் வருமொழியின் உயிர் எழுத்து சேர்தல்.

சரி

8.  புணர்ச்சியின் மற்றொரு முறை நிலைமொழியின் உயிர் எழுத்து முன் வருமொழியின் மெய்யெழுத்து சேர்தல்.

சரி

9.  புணர்ச்சியின் மற்றொரு முறை நிலைமொழியில் மெய் எழுத்து முன் வருமொழியின் மெய் எழுத்து சேர்தல்.

சரி

10. புணர்ச்சியின் மற்றொரு முறை நிலைமொழியில் மெய்எழுத்து முன் வருமொழியின் உயிர் எழுத்து சேர்தல்.

சரி