புணர்ச்சி
பயிற்சி - 2
Exercise 2
1. நிலைமொழியின் இறுதியில் -----------, --------- எழுத்துகள் வரலாம்.
நிலைமொழியின் இறுதியில் உயிர்,மெய் எழுத்துகள் வரலாம்.
2. வருமொழியின் முதலில் ----------, --------- எழுத்துகள் வரலாம்.
வருமொழியின் முதலில் உயிர்,மெய் எழுத்துகள் வரலாம்.
3. நிலைமொழியில் ----------, ----------- சொற்கள் வரலாம்.
நிலைமொழியில் பெயர்ச்,வினைச் சொற்கள் வரலாம்.
4. வருமொழியில் --------, ---------- சொற்கள் வரலாம்.
வருமொழியில் பெயர்ச்,வினை்ச் சொற்கள் வரலாம்.
5. இளங்கோ + புத்தகம் என்பது ----------- சொல் முன் -------- சொல் புணரும் புணர்ச்சி முறையாகும்.
இளங்கோ + புத்தகம் என்பது பெயர்ச் சொல் முன் பெயர்ச் சொல் புணரும் புணர்ச்சி முறையாகும்.
6. இளங்கோ + படித்தான் என்பது -------- சொல் முன் --------- சொல் புணரும் புணர்ச்சி முறையாகும்.
இளங்கோ + படித்தான் என்பது பெயர்ச் சொல் முன் வினைச் சொல் புணரும் புணர்ச்சி முறையாகும்.
7. வந்தான் + இளங்கோ என்பது ----------- சொல் முன் ------- சொல் புணரும் புணர்ச்சி முறையாகும்.
வந்தான் + இளங்கோ என்பது வினைச் சொல் முன் பெயர்ச் சொல் புணரும் புணர்ச்சி முறையாகும்.
8. ஓடி + விழுந்தான் என்பது -------- சொல் முன் --------- சொல் புணரும் புணர்ச்சி முறையாகும்.
ஓடி + விழுந்தான் என்பது வினைச் சொல் முன் வினைச் சொல் புணரும் புணர்ச்சி முறையாகும்.
9. புணர்ச்சியின் இருவகைகள் -----------, ---------.
புணர்ச்சியின் இருவகைகள் இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி .
10. இரு சொற்களின் சேர்க்கையின் போது ஏதேனும் ஓர் எழுத்து புதிதாகப் பிறந்தால் அது ------ விகாரப் புணர்ச்சி எனப்படும்.
இரு சொற்களின் சேர்க்கையின் போது ஏதேனும் ஓர் எழுத்து புதிதாகப் பிறந்தால் அது தோன்றல் விகாரப் புணர்ச்சி எனப்படும்.