எழுத்தும் சொல்லும்
பாட அறிமுகம்
Introduction to Lesson
முதல் - சார்பு என்னும் இரு வகைகளுக்கான விளக்கம் அப்பெயர்களிலேயே அமைந்துள்ளன. முதன்மையுடையதே முதல் எழுத்து ஆகும். தனக்கெனத் தனித்தன்மை இல்லாதது சார்பெழுத்து ஆகும். தனித்து இயங்கும் ஆற்றல் முதல் எழுத்துகளுக்கு உண்டு. அவ்வாறே தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதவை சார்பெழுத்துகள் ஆகும். தாமே தனித்து நடக்க முடியாதவர் ஓர் ஊன்றுகோலைச் சார்ந்துதான் நடப்பார். நடக்கவோ, நிற்கவோ முடியாதவர் தூணிலோ, சுவரிலோ சார்(ய்)ந்துதான் இருப்பார். அத்தகு, சார்பு / சாய்வுத் தன்மைதான் சார்பெழுத்திலும் அமைகின்றது. இவை சார்பெழுத்து என்னும் பெயர் அமைந்ததற்கான விளக்கங்கள் ஆகும்.