13. எழுத்தும் சொல்லும்

எழுத்தும் சொல்லும்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  சார்பெழுத்துகள் தனித்து இயங்குமா?

சார்பெழுத்துகள் தனித்து இயங்கா(து).

2.  உயிர்நெடில் மாத்திரைஅதிகமாக ஒலித்தால் அதன் பெயர் என்ன?

உயிர்நெடில் மாத்திரைஅதிகமாக ஒலித்தால் அதன் பெயர் உயிரளபெடை.

3.  ஏரின்உழாஅர் - இது எவ்வகை அளபெடை?

ஏரின்உழாஅர் என்பது இசைநிறை அளபெடை.

4.  நசை என்பது சொல்லிசை அளபெடையில் எவ்வாறு மாறிவரும்?

நசை என்பது சொல்லிசை அளபெடையில் நசைஇ என்று மாறிவரும்.

5.  மருளும் - மருண்ம் - இவ்விரண்டில் எது மகரகுறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?

மருண்ம் என்பது மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

6.  பிரிக்கக் கூடியப் பதத்தின் பெயர் என்ன?

பிரிக்கக் கூடியப் பதத்தின் பெயர் பகுபதம்.

7.  பகுபதத்தின் முதல் உறுப்பு எது?

பகுபதத்தின் முதல் உறுப்பு பகுதி.

8.  தனிமொழி, தொடர்மொழி இவற்றைத் தொடர்ந்து இடம் பெறுவது எம்மொழி?

தனிமொழி, தொடர்மொழி இவற்றைத் தொடர்ந்து இடம் பெறுவது பொதுமொழி.

9.  மலர் சூடினாள் - இது எவ்வகை மொழி?

மலர் சூடினாள் என்பது தொடர்மொழி.

10.  தாமரை - இது தா + மரை எனப் பிரிந்து பொருள் தந்தால் எவ்வகை மொழியில் அடங்கும்?

தாமரை - இது தா + மரை எனப் பிரிந்து பொருள் தந்தால் இது பொதுமொழியில் அடங்கும்.