எழுத்தும் சொல்லும்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
தமிழ் இலக்கணம் ஐந்து வகைபெறும். அவற்றுள் முதலாவது எழுத்து இலக்கணம் என்பதைச் சான்றிதழ்க்கல்வி முதல்நிலைப் பாடங்களில் நீங்கள் கற்று உணர்ந்திருப்பீர்கள். ஒலியானது உள்ளே இருந்து எழுந்து வருவது;அதுவே எழுத்து என ஆகின்றது. அவ்வாறே எழுதப்படுவது என்பதாலும் எழுத்து என்ற பெயர் பொருத்தமாகின்றது. எனவே, எழுவது, எழுதுவது என்னும் இரண்டுமே எழுத்து எனக் கொள்ளலாம். எழுத்துகளை முதல் எழுத்து, சார்புஎழுத்து என வகைப்படுத்திய நிலையும் நீங்கள் அறிந்ததே. இப்பாடம் சார்பெழுத்துகளில் சில வகைகளைப் பற்றியதாக அமைகின்றது.