13. எழுத்தும் சொல்லும்

எழுத்தும் சொல்லும்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  தனித்து இயங்கும் ஆற்றல் ------------ எழுத்துகளுக்கே உண்டு.

தனித்து இயங்கும் ஆற்றல் முதல் எழுத்துகளுக்கே உண்டு.

2.  சார்பெழுத்துகளில் ஒரு பிரிவாகிய அளபெடை என்பது --------- வகைகளை உடையது.

சார்பெழுத்துகளில் ஒரு பிரிவாகிய அளபெடை என்பது இரண்டு வகைகளை உடையது.

3.  உயிரெழுத்துகளில் ---------- எழுத்துகள் அளபெடுக்கும்.

உயிரெழுத்துகளில் நெடில் எழுத்துகள் அளபெடுக்கும்.

4.  ஓசை குறையாத போதும் அளபெடை அமைந்தால் அதனை --------- அளபெடை என்பர்.

ஓசை குறையாத போதும் அளபெடை அமைந்தால் அதனை இன்னிசை அளபெடை என்பர்.

5.  மாத்திரை குறைந்து ஒலிப்பது ------------- ஆகும்.

மாத்திரை குறைந்து ஒலிப்பது குறுக்கம் ஆகும்.

6.  ஐந்து என்பதில் ---------- அமைந்துள்ளது.

ஐந்து என்பதில் ஐகாரக் குறுக்கம் அமைந்துள்ளது.

7.  ஒளகாரக் குறுக்கம் மொழி ----------- மட்டும் இடம்பெறும்.

ஒளகாரக் குறுக்கம் மொழி முதலில் மட்டும் இடம்பெறும்.

8.  போலும் என்பது போன்ம் என மாறினால் -------- குறுகும்.

போலும் என்பது போன்ம் என மாறினால் மகரம் குறுகும்.

9.  பிரிக்க முடியாத சொல் ------------ ஆகும்.

பிரிக்க முடியாத சொல் பகாப்பதம் ஆகும்.

10.  மொழி என்பது --------- என்பதைக் குறிக்கும்.

மொழி என்பது சொல் என்பதைக் குறிக்கும்.