முகப்பு |
பலாப்பழம் |
77. குறிஞ்சி |
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் |
||
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் |
||
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு |
||
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச் |
||
5 |
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
|
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் |
||
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் |
||
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் |
||
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை |
||
10 |
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
|
திதலை அல்குல், குறுமகள் |
||
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. | உரை | |
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்
|
116. குறிஞ்சி |
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் |
||
தாம் அறிந்து உணர்க' என்பமாதோ; |
||
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று, |
||
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை, |
||
5 |
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் |
|
மலை கெழு நாடன் கேண்மை, பலவின் |
||
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் |
||
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச் |
||
சேணும் சென்று உக்கன்றே அறியாது |
||
10 |
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த |
|
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் |
||
இன்னும் ஓவார், என் திறத்து அலரே! | உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.-கந்தரத்தனார்
|
201.குறிஞ்சி |
'மலை உறை குறவன் காதல் மட மகள், |
||
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்; |
||
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள் |
||
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும், |
||
5 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் |
|
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு, |
||
அவ் வெள் அருவிக் குட வரையகத்து, |
||
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், |
||
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், |
||
10 |
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின் |
|
மாயா இயற்கைப் பாவையின், |
||
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே. | உரை | |
கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்
|
213. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, |
||
'கன்று கால்யாத்த மன்றப் பலவின் |
||
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் |
||
குழவிச் சேதா மாந்தி, அயலது |
||
5 |
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
|
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, |
||
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென |
||
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த |
||
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் |
||
10 |
கொய் புனம் காவலும் நுமதோ?- |
|
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! | உரை | |
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
232. குறிஞ்சி |
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம் |
||
குளவித் தண் கயம் குழையத் தீண்டி, |
||
சோலை வாழை முணைஇ, அயலது |
||
வேரல் வேலிச் சிறுகுடி அலற, |
||
5 |
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
|
மா மலை நாட!-காமம் நல்கென |
||
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை |
||
வீ உக வரிந்த முன்றில், |
||
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. | உரை | |
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்
|
326. குறிஞ்சி |
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன், |
||
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம் |
||
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது, |
||
துய்த் தலை மந்தி தும்மும் நாட! |
||
5 |
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே |
|
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் |
||
பசலை ஊரும் அன்னோ; பல் நாள் |
||
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண, |
||
வண்டு எனும் உணராவாகி, |
||
10 |
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. | உரை |
தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
353. குறிஞ்சி |
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த |
||
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள, |
||
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை, |
||
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
||
5 |
கல் கெழு குறவர் காதல் மடமகள் |
|
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும், |
||
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம் |
||
காமம் கனிவதுஆயினும், யாமத்து |
||
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை |
||
10 |
வெஞ் சின உருமின் உரறும் |
|
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே. | உரை | |
தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்
|