முகப்பு |
இறால் (இறவு, சேயிறா) |
19. நெய்தல் |
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் |
||
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, |
||
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, |
||
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி, |
||
5 |
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
|
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க, |
||
செலீஇய சேறிஆயின், இவளே |
||
வருவை ஆகிய சில் நாள் |
||
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே! | உரை | |
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்
|
27. நெய்தல் |
நீயும் யானும், நெருநல், பூவின் |
||
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, |
||
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் |
||
கழி சூழ் கானல் ஆடியது அன்றி, |
||
5 |
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
|
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும் |
||
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு |
||
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் |
||
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, |
||
10 |
கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல |
|
சிறு பாசடைய நெய்தல் |
||
குறுமோ, சென்று' எனக் கூறாதோளே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்
|
31. நெய்தல் |
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி, |
||
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை |
||
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால் |
||
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும் |
||
5 |
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
|
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து, |
||
யானும் இனையேன்-ஆயின், ஆனாது |
||
வேறு பல் நாட்டில் கால் தர வந்த |
||
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல் |
||
10 |
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு |
|
உலவுத் திரை ஓதம் வெரூஉம் |
||
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்
|
49. நெய்தல் |
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் |
||
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே; |
||
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் |
||
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே; |
||
5 |
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, |
|
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச் |
||
சென்று நாம் அறியின், எவனோ-தோழி! |
||
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ |
||
முன்றில் தாழையொடு கமழும் |
||
10 |
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? | உரை |
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்
|
67. நெய்தல் |
சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் |
||
மால் வரை மறைய, துறை புலம்பின்றே; |
||
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு |
||
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய |
||
5 |
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே; |
|
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித் |
||
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை, |
||
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ, |
||
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால், |
||
10 |
தங்கின் எவனோதெய்ய-பொங்கு பிசிர் |
|
முழவு இசைப் புணரி எழுதரும் |
||
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.-பேரி சாத்தனார்
|
101. நெய்தல் |
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச் |
||
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் |
||
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி, |
||
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் |
||
5 |
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி |
|
இனிதுமன்; அளிதோ தானே-துனி தீர்ந்து, |
||
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின், |
||
மீன் எறி பரதவர் மட மகள் |
||
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே. | உரை | |
பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.-வெள்ளியந்தின்னனார்
|
111. நெய்தல் |
அத்த இருப்பைப் பூவின் அன்ன |
||
துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர், |
||
வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர், |
||
மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் |
||
5 |
வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, |
|
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, |
||
வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, |
||
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் |
||
பெருங் கழிப் பாக்கம் கல்லென |
||
10 |
வருமே-தோழி!-கொண்கன் தேரே. | உரை |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
|
127. நெய்தல் |
இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரை |
||
இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து, |
||
உவன் வரின், எவனோ?-பாண!-பேதை |
||
கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த |
||
5 |
கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும், |
|
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய |
||
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும், |
||
'மெல்லம் புலம்பன் அன்றியும், |
||
செல்வாம்' என்னும், 'கானலானே'. | உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-சீத்தலைச் சாத்தனார்
|
168. குறிஞ்சி |
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
||
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
||
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
||
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
||
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
||
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
||
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
||
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
||
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
211. நெய்தல் |
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல் |
||
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில், |
||
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த |
||
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய |
||
5 |
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, |
|
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத் |
||
துறு கடற் தலைய தோடு பொதி தாழை |
||
வண்டு படு வான் போது வெரூஉம் |
||
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே? | உரை | |
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.-கோட்டியூர் நல்லந்தையார்
|
278. நெய்தல் |
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை, |
||
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ, |
||
பொன்னின் அன்ன தாது படு பல் மலர் |
||
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் |
||
5 |
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை |
|
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்- |
||
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி |
||
குளம்பினும் சேயிறா ஒடுங்கின; |
||
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே. | உரை | |
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.- உலோச்சனார்
|
358. நெய்தல் |
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, |
||
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, |
||
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, |
||
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம், |
||
5 |
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என, |
|
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய், |
||
பரவினம் வருகம் சென்மோ-தோழி!- |
||
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் |
||
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம் |
||
10 |
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் |
|
அரும் பெறல் ஆய் கவின் தொலைய, |
||
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே. | உரை | |
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.- நக்கீரர்
|