முகப்பு |
தாழை (கைதை) |
163.நெய்தல் |
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர் |
||
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன |
||
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை. |
||
வெள் வீத் தாழை திரை அலை |
||
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே? |
உரை | |
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன் |
219. நெய்தல் |
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர் |
||
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே; |
||
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே; |
||
'ஆங்கண் செல்கம் எழுக' என, ஈங்கே, |
||
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத் |
||
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு |
||
இடம்மன்-தோழி!-'எந் நீரிரோ?' எனினே. |
உரை | |
சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார். |
226. நெய்தல் |
பூவொடு புரையும் கண்ணும், வேய் என |
||
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என |
||
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும் |
||
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும் |
||
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் |
||
குருகு என மலரும் பெருந் துறை |
||
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் |
228. நெய்தல் |
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை, |
||
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் |
||
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில், |
||
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து |
||
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும், |
||
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. |
உரை | |
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் |
245. நெய்தல் |
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் |
||
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே- |
||
வாள் போல் வாய கொழு மடல் தாழை |
||
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் |
||
மெல்லம் புலம்பன் கொடுமை |
||
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மாலை மாறன் |
303. நெய்தல் |
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு |
||
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல் |
||
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! |
||
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் |
||
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும் |
||
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல் |
||
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே. |
உரை | |
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன் |
304. நெய்தல் |
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி |
||
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் |
||
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக் |
||
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய, |
||
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து |
||
வெண் தோடு இரியும் வீ ததை கானல், |
||
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு |
||
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன் |
345. நெய்தல் |
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர் |
||
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் |
||
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய |
||
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல- |
||
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி |
||
இழுமென ஒலிக்கும் ஆங்கண் |
||
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே? |
உரை | |
பகல் வந்து ஒழுகுவானைத் தோழி 'இரா வா' என்றது. - அண்டர் மகன் குறுவழுதி |