|
|
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே- |
|
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் |
|
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் |
|
மலர்த் தலைக் காரான் அகற்றிய தண் நடை |
5 |
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், |
|
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு |
|
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின் |
|
யாரோ பிரிகிற்பவரே-குவளை |
|
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின் |
10 |
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே? |
உரை |
|
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை |
|
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென, |
|
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் |
|
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் |
5 |
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும், |
|
பெண்ணை வேலி, உழை கண் சீறூர் |
|
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல; |
|
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த |
|
கானலொடு அழியுநர் போலாம்-பானாள், |
10 |
முனி படர் களையினும் களைப; |
|
நனி பேர் அன்பினர் காதலோரே. |
உரை |
|
இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|
|
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் |
|
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, |
|
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, |
|
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், |
5 |
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி |
|
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி, |
|
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன் |
|
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய, |
|
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப, |
10 |
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன், |
|
நேர்வர்கொல் வாழி-தோழி!-நம் காதலர் |
|
புதுவர் ஆகிய வரவும், நின் |
|
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே? |
உரை |
|
வரைவு மலிந்தது.-கோவூர் கிழார்
|
|
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, |
|
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, |
|
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப, |
|
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், |
5 |
வன் பரல் முரம்பின், நேமி அதிர, |
|
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே; |
|
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின் |
|
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு |
|
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? |
உரை |
|
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.-ஒளவையார்
|
|
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு |
|
யாரையும் அல்லை; நொதுமலாளனை; |
|
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்; |
|
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் |
5 |
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, |
|
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் |
|
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த |
|
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் |
|
கடல் கெழு மாந்தை அன்ன, எம் |
10 |
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. |
உரை |
|
''நலம் தொலைந்தது'' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.-அம்மூவனார்
|
|
பெய்து போகு எழிலி வைகு மலை சேர, |
|
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப, |
|
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள், |
|
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ, |
5 |
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை |
|
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று |
|
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்! |
|
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் |
|
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பல் நாள் |
10 |
காமர் நனி சொல் சொல்லி, |
|
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே? |
உரை |
|
தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
|
|
தோளும் அழியும், நாளும் சென்றென; |
|
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக் |
|
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து |
|
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே; |
5 |
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; |
|
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ |
|
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், ''சாவின் |
|
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின், |
|
மறக்குவேன்கொல், என் காதலன்'' எனவே. |
உரை |
|
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு ''ஆற்றுவல்'' என்பது படச் சொல்லியது.-அம்மூவனார்
|
|
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே; |
|
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே; |
|
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் |
|
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து, |
5 |
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே; |
|
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் ''முன், |
|
சென்மோ, ''சேயிழை?'' என்றனம்; அதன் எதிர் |
|
சொல்லாள் மெல்லியல், சிலவே-நல் அகத்து |
|
யாணர் இள முலை நனைய, |
10 |
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே. |
உரை |
|
முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, ''நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி'' எனச் சொல்லியது.- உலோச்சனார்
|
|
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
|
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
|
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
|
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
|
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
|
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
|
பெருமை உடையள் என்பது |
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? |
உரை |
|
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, ''எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்'' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.''இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்'' என்றாட்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -தொல் கபிலர்
|
|
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் |
|
நெல் விளை கழனி நேர் கண் செறுவின், |
|
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய |
|
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! |
5 |
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, |
|
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? |
|
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
|
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த |
|
கேண்மையொடு அளைஇ, நீயே |
10 |
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. |
உரை |
|
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், ''நின் இன்று அமையாம்'' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்
|
|