தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உயர் கல்வித் திட்டங்கள்

பட்டயமும், மேற்பட்டயமும், இளநிலைத் (தமிழியல்) திட்டத்தில் அடங்கியவை. இளநிலை (தமிழியல்) மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதி - 1 தாய்மொழிப் பாடங்களைக் கொண்டது. பகுதி - 2, பிறமொழிப் பாடங்களைக் கொண்டது. ஏற்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதோவொரு துறையில் பட்டம் பெற்றுள்ள மாணவர்களுக்கு இவ்விரண்டு பகுதிகளுக்கும், விலக்கு அளிக்கப்படும். கல்லூரி அளவில், பட்ட நிலையில் வழங்கப்படும் மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் விலக்கு அளிக்கப்படும். இவ்விரண்டும் இல்லாதவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களில், த.இ.க. வழியாகத் தேர்ச்சி பெற வேண்டும். இப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும், 16 மதிப்பிலக்குகள் வழங்கப்படுகின்றன.

பகுதி - 3 தமிழியல் பாடங்களைக் கொண்டது. இதில் 16 தாள்கள் வெவ்வேறு தமிழ்ப் புலங்களில் உள்ளன. ஒவ்வொரு தாளும் நான்கு தொகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் ஆறு பாடங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும் நான்கு மதிப்பிலக்குகள் வழங்கப்படுகின்றன. (அதாவது 1 தொகுதி --> 1 மதிப்பிலக்கு). இந்தப் பாடங்களைப் பயின்று 16 மதிப்பிலக்குகள் பெறுவோர் பட்டயம் பெறுவர்; 40 மதிப்பிலக்குகள் பெறுவோர் மேற்பட்டயம் பெறுவர். 16 தாள்களையும் பயின்று 64 மதிப்பிலக்குகள் பெறுவோர் இளநிலைப் (தமிழியல்) படிப்பின் பகுதி - 3க்குத் தகுதி பெறுவர்.

பாட அமைப்பு

தாளுக்கு ஓர் அறிமுகமும், தொகுதிக்கு ஒரு பொது விளக்கமும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஒலி, வரி வடிவங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்து வடிவில் மட்டுமே நீண்ட உரைநடையைப் படிக்கும்போது தோன்றும் அயர்வையும் சலிப்பையும் தவிர்க்கப் பாடங்கள் ஒலி, ஒளி, போன்ற பல்லூடக வசதிகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பாடத்தில் படங்கள், அசைவுப் படங்கள் ஆகியவை ஆங்காங்கே தேவைக்கேற்பத் தரப்பட்டுள்ளன. செய்யுள் வரிகள் ஒலி வடிவிலும் கொடுக்கப்பட்டுள்ளன. படித்த செய்திகளை நினைவுபடுத்திக்கொள்ள, பாடத்தின் இரண்டு இடங்களில் தன் மதிப்பீட்டிற்கான வினாக்கள் தரப்பட்டுள்ளன. வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் விடையைக் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாட இறுதியில் தொகுப்புரை ஒன்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் அத்துறை வல்லுநர் ஒருவரின் சிறிய சிறப்பு உரை ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2019 11:14:37(இந்திய நேரம்)