Primary tabs
பாடம் - 2
A01112 சிலப்பதிகாரம்
இந்தப் பாடம் தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரம் பற்றிப் பேசுகிறது. சிலம்பால் விளைந்த அதிகாரம் சிலப்பதிகாரம். இக்காப்பியத்தைப் படைத்த ஆசிரியர் வரலாறு, காப்பியம் எழுந்த காலச் சூழல், காப்பிய அமைப்பு, கதைச் சுருக்கம், சிலம்பின் இலக்கிய நயம், சமூகச் சிந்தனை, அரசியல் சிந்தனை ஆகியவை பற்றி இந்தப் பாடம் பேசுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
●தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கருவூலமாகப் போற்றப்பெறும் சிலப்பதிகாரக் காப்பியக் கதையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.●இச்சிறப்புமிக்க காப்பியத்தைப் படைத்த ஆசிரியர் வரலாறு மற்றும் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.●சிலம்பின் இலக்கியச் சிறப்பினைச் சுவைத்து மகிழலாம்.●சிலம்பின் சமயக் கருத்துகளை, அறக் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.●சிலப்பதிகாரக் காலச் சமூகச் சூழலை விளங்கிக் கொள்ளலாம்.●தமிழக மூவேந்தர்தம் ஆட்சிச் சிறப்பு, அவர்தம் செங்கோன்மை, உயிர் இரக்கப் பண்பு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.●தமிழர்தம் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் பற்றிய செய்திகளை விளங்கிக் கொள்ளலாம்.