தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-சீவக சிந்தாமணி

  • பாடம் - 4

    A01114   சீவக சிந்தாமணி

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் சீவக சிந்தாமணி எனும் காப்பியம் பற்றிப் பேசுகிறது. முதலில் இக்காப்பியத்தை இயற்றிய ஆசிரியர் வரலாறு, காப்பியத்தின் காலம், காப்பியத்தின் கதை மூலம் ஆகியவைப் பற்றிச் சொல்கிறது. அடுத்து காப்பியத்தின் கட்டமைப்புப் பற்றிக் கூறுகிறது. தொடர்ந்து காப்பியத்தின் கதையைச் சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. அதன் பின்னர்ச் சீவக சிந்தாமணியில் காணப்படும் இலக்கியச் சிறப்பு, சமூகச் சிந்தனை ஆகியவற்றை வகைப்படுத்திக் கூறுகிறது. இறுதியாகச் சீவக சிந்தாமணி வாயிலாக அறியப்படும் பல்வேறு கலைகளைப் பற்றிச் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    பெருங்காப்பியத்தின் அமைப்பினை அறியலாம்.

    பல்வேறு வகையான மணமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    பகைவனைச் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும் எனும் அக்கால அரசியல் போர் அறத்தை உணரலாம்.

    பல்வேறு சமயக் கொள்கைகளை அறிவதோடு, சமண சமயத்தின் சிறப்பினை உணரலாம்.

    காமன் வழிபாடு அக்காலச் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தமையைத் தெளிவாக அறியலாம்.

    அரசர்களிடம் சுயம்வரம் நடத்தித் திருமணம் செய்யும் நடைமுறை இருந்ததை அறியலாம்.

    இசைக்கலை, பந்தாடல் விளையாட்டு முதலானவை சிறப்புற்றிருந்தமையை உணர்ந்து கொள்ளலாம்.

    அக்காலத்தில் நிலவியிருந்த பல அரசியல் அறம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    திருமணம், குழந்தைப் பிறப்பு, விழாக்கள் முதலான சிறப்பான சடங்குமுறைகளுடன் நடத்தப்பட்டதை அறியலாம்.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:19:05(இந்திய நேரம்)